சோழப் பேரரசிற்குக் கங்கை கொண்ட சோழபுரம் தலைநகராயிற்று,
முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த சோழ
மன்னர்களுக்கும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகரமாக
இருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் சோழப் பேரரசின்
தலைநகராகச் சுமார் 250 ஆண்டுகள் பெருமையுடன்
விளங்கியது. இத்துணை சிறப்புமிக்க நகரம் எங்கே போயிற்று?
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பெருமையுடன் விளங்கிய பாண்டிய
மன்னர் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251-68)
படையெடுப்பினால் இந்நகரம் அழிவுற்றிருக்கலாம் எனக்
கருதப்படுகிறது. சுந்தரபாண்டியனுக்குப் பின் ஆட்சி புரிந்த
மாறவர்மன் குலசேகரன் (1268-1310) மூன்றாம் இராஜேந்திரன்
என்ற கடைசி சோழ மன்னரைக் கி.பி. 1279இல் தோற்கடித்துச்
சோழராட்சி மறைந்திடச் செய்தார்.
மறைந்த தலைநகரின்
எஞ்சிய பகுதிகள் சிலவற்றை
இன்று நாம் காணலாம். கங்கை கொண்ட
சோழபுரத்திற்கு
2 கி.மீ. தென்கிழக்கிலுள்ள ‘மாளிகை மேடு’ என்ற இடத்தில்
இராஜேந்திர சோழன் வாழ்ந்த மாளிகையின் அடையாளங்கள்
உள்ளன. இங்கு அகழ்ந்து காணப்பட்ட தொல்பொருள்கள்
தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினரால், மாளிகை
மேட்டுப் பகுதியிலேயே காட்சிப் பொருள்களாக
வைக்கப்பட்டுள்ளன.
கங்கை கொண்ட சோழபுரத்தின் ‘கோ இல்’ மறைந்த
பின்னும், ‘கோவில்’ மட்டும் அழியாது நின்று, இராசேந்திர
சோழனின் பெருமையைக் கூறுகிறது. தொல்பொருள்
துறையினரின் ஆராய்ச்சியில் இந்நகரம் இருந்து வருகிறது.
கங்கை கொண்ட சோழீசுவரத்தின் சிறப்பு
இராசேந்திர சோழர்
தம் தந்தையைப்போல் ஒரு சிவ
பக்தராக விளங்கினார். தம் தந்தை அமைத்த பிரகதீஸ்வரர்
ஆலயம் புகழுடன் விளங்கினாலும், தம் புதிய தலைநகருக்கு
ஒரு சிவாலயம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும்,
|