பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்161

பூதி, சாத்தம் பழியிலி ஆகியோர் முத்தரைய தலைவர்களில்
குறிப்பிடத்தக்க சிலர் ஆவர். முத்தரையர்களில் இளைய
பரம்பரையினர் மலையடிப்பட்டியை மையமாகக்கொண்டு
ஆட்சி புரிந்தனர். விஜயாலயன் என்ற தஞ்சைச் சோழ
மன்னனின் எழுச்சியால் முத்தரையர் ஆட்சி முடிவுற்றுத்
திருச்சி தஞ்சைச் சோழர்களின் ஆட்சியின்கீழ் வந்தது.
கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல், 12ஆம் நூற்றாண்டுவரை
திருச்சி, தஞ்சைச் சோழர்களின் ஆட்சியில் இருந்தது.
தஞ்சைச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் பாண்டிய மன்னர்கள்
ஆட்சியில் திருச்சி வந்தது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஒய்சள
மன்னன் வீர சோமேஸ்வரன் கண்ணனூரைத் தலைநகராகக்
கொண்டு ஆட்சி புரிந்தார். கண்ணனூர் இன்றைய திருச்சி
நகரின் அருகிலுள்ள சமயபுரப் பகுதி எனப்படுகிறது.
பாண்டியர் வீழ்ச்சியையடுத்து மதுரை சுல்தானிய அரசின்
ஆதிக்கத்தில் இப்பகுதி வந்தது.

குமார கம்பணரின் மதுரைப் படையெடுப்பு
வெற்றியடைந் ததையொட்டி (கி.பி. 1371) திருச்சி மற்றும் இதர
பகுதிகள் விஜயநகர அரசின் ஆட்சியின்கீழ் வந்தன.
விஸ்வநாதரால்
மதுரை நாயக்க அரசு தோற்றுவிக்கப்பட்ட
பொழுது திருச்சிப் பகுதி இவ்வரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் திருச்சி நகர் பெரிதும்
வளர்ச்சியடைந்தது. விஸ்வநாதர் வழிவந்த முத்துவீரப்பர்
கி.பி.1616இல் தம் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு
மாற்றினார். விஜய நகர மன்னர் இரண்டாம் வெங்கடன்
இறந்தபின், அவருக்குப் பின் பதவிக்கு வருவது குறித்துப்
போட்டி ஏற்பட்டது. இப்போட்டியில் யச்சம நாயக்கர்
தலைமையிலான ஒரு பிரிவினருக்கும், ஜக்கராயர்
தலைமையிலான மற்றொரு பிரிவினருக்கும் திருச்சிக்கு
அருகில் போர் ஏற்பட்டது. இப்போர் தோப்பூர் போர்
எனப்படும். இப்போர் கி.பி.1616இல் நடந்தது. (காவிரியின்
தென்கரையில் பேரணையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் போர்
நடந்தது.) யச்சம நாயக்கருக்குத் தஞ்சை நாயக்கர் இரகுநாதரும்,
ஜக்கராயருக்கு மதுரை நாயக்கர் முத்து வீரப்பரும், செஞ்சி
நாயக்கரும் ஆதரவளித்தனர். இப்போரில் முத்துவீரப்பர்
ஆதரவளித்த ஜக்கராயர் வெற்றி பெறவில்லை. திருமலை
மன்னர்
(1623-1659) மதுரை நாயக்க அரசின் தலைநகரை