முகமதலிக்கும் சந்தா சாகிப்புக்கும் போட்டி ஏற்பட்டது. சந்தா
சாகிப் பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளே, ஹைதராபாத் நிஜாம்
ஆகியோரின் உதவியைப் பெற்றார். ஆம்பூர் போரில்
நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்டார் (1749). அன்வாருதீனின்
மகன் முகமதலி தமது பாதுகாப்பிற்காகத் திருச்சிக்
கோட்டைக்குள் புகுந்தார். இதனால் சந்தா சாகிப்பின்
படைகள் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டன (கி.பி.1751).
முகம்மதலி ஆங்கிலேயரின் உதவியையும் மைசூர் மன்னரின்
உதவியையும் பெற்றார். பகைவர்களால் எளிதில் தாக்கமுடியாதபடி
திருச்சிக் கோட்டை பலம் மிக்கதாக விளங்கியது. இறுதியில்,
சந்தாசாகிப்; தோல்வியுற்றார். அவரும் கொல்லப்பட்டார்.
திருச்சி முற்றுகை விடுவிக்கப்பட்டது(1752). முகமதலி
ஆர்க்காட்டின் நவாபானார். ஆனால், நவாப் முகமதலி
வாலாஜா கைசூர் மன்னருக்குக் கொடுத்த ஒரு வாக்கை
நிறைவேற்றாததால் மைசூர்ப் படைகள் திருச்சிமீது
படையெடுத்தன. திருச்சிக் கோட்டை தாக்கப்பட்டது(1753).
ஆனால், மைசூர்ப் படைகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
பல முற்றுகைகளுக்கும், தாக்குதல்களுக்கும் உட்பட்ட
திருச்சிக் கோட்டைப் பகுதிகள் பிற்காலத்தில் அழிவுற்று
அகற்றப்பட்டன. திரிபுரா மலைமீது கோட்டைப் பகுதி எதுவும்
இல்லை. திருச்சிக் கோட்டையின் எஞ்சிய பகுதிகளில் இன்று
நல்ல நிலையில் காணப்படுவது ‘மெயின்கார்டு கேட்’ என்ற
வாயில் பகுதியாகும். இவ்வாயில் தெப்பக்குளத்தின் தென்மேற்கில்
உள்ளது.
பழைய கோட்டையின் சிதைவுற்ற ஒரு பகுதி,
தெப்பக்குளத்தின் வடபகுதியிலுள்ள ‘பட்டர்வர்த்
சாலை’யில் உள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சிக் கோட்டையின் எஞ்சிய
பகுதிகளைக் காப்பது நமது கடமையாகும்.
‘மெயின்கார்டு கேட்’ அருகிலுள்ள தெப்பக்குளம், மதுரை
நாயக்க அரசைத் தோற்றுவித்த விஸ்வநாதரால் உருவாக்கப்பட்டது
என்று கூறப்படுகிறது. தெப்பக்குளத்தின் தென் கிழக்கு மூலையில்
‘கிளைவ் விடுதி’ (Clive`s
Hostel) என்ற கட்டடப்பகுதி
உள்ளது. சந்தாசாகிப்பின் திருச்சி முற்றுகையை
|