விடுவித்து (1752) முகமதலிக்கு ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின் படைகள் உதவியபொழுது, ‘ஆர்க்காட்டு வீரர்’
இராபர்ட் கிளைவ், இக்கட்டடத்தில் தங்கியிருந்தார்
எனப்படுகிறது. தற்பொழுது இக்கட்டடம், தெப்பக்குளம்
அருகிலுள்ள புனித ஜோசப் கல்லூரியின் மாணவர்கள்
தங்கும் ஒரு விடுதியாக உள்ளது.
அரசி மங்கம்மாள் அரண்மனையின் எஞ்சிய பகுதிகள்
திருச்சியைத் தலைநகராகக்கொண்டு மதுரை நாயக்க
அரசி மங்கம்மாள் கி.பி.1689முதல் கி.பி.1706வரை ஆட்சி
புரிந்தார். அரசி மங்கம்மாள் காலத்து அரண்மனையின்
எஞ்சிய பகுதி திருச்சி நகரின் மத்தியில் (தெப்பக்குளத்திற்குத்
தெற்கில் சிறிது தொலைவில்) உள்ளது. இது அரசி
மங்கம்மாள்
அரியணையிலிருந்து ஆட்சி செய்த (Audience
Hall)
கட்டடமாகும். இக்கட்டடத்தில் காணப்படும் உயரம் குறைந்த
அழகிய தூண்கள், வளைவுகள், அறையின் மத்தியில் அமைந்துள்ள
பெரிய குவிமாடம் ஆகியவை நாயக்கர் காலக் கட்டடச்
சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. குவிமாடத்தின்
உயரே வண்ண ஓவியங்கள் உள்ளன. இக்கட்டடத்தில் திருச்சி
நகரின் ‘நகர் மன்றம்’ (Town
hall) செயல்படுகிறது. இந்‘நகர்
மன்றம்’ 1881ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மன்றத்தின்
முதல் தலைவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகப்
பணியாற்றிய ஹென்றி சிவெல் ஆவார். அரசி மங்கம்மாளின்
அரண்மனைக் கட்டடத்தில் அமைந்துள்ள இம்மன்றம்,
இக்கட்டடத்தைத் திருச்சி நகர் மக்களின் நலனுக்குப் பயன்படுத்தி
வருகிறது.
‘நகர் மன்றம்’ செயல்படும் கட்டடத்தை அடுத்து நாயக்கர்
காலக் கட்டடங்கள் சில உள்ளன. இவற்றில் அரசு
அலுவலகங்கள் செயல்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க
இக்கட்டடங்களை நாம் நன்கு காத்திட வேண்டும்.
(திருச்சி நகரிலுள்ள அரசி மங்கம்மாள் காலத்துக்
கட்டடங்கள்போல் மதுரை நகரில் வடக்குச் சித்திரை
வீதி,
தெற்குச் சித்திரை வீதி, தமுக்கம் ஆகிய பகுதிகளில்
உள்ளன.)
|