பக்கம் எண் :

166தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இந்துக் கோவில்கள்

தாயுமான சுவாமி கோயில்

திருச்சி நகரின் மத்தியில் திரிசிரா மலை உள்ளது.
இம்மலையில் சுவாமி, அம்மன், உச்சிப்பிள்ளையார்
என்னும் மூன்று சிகரங்கள் (திரிசிரம்) உள்ளதால் ‘திரிசிராமலை’
என்ற பெயர் ஏற்பட்டது என்பர். இம்மலையில் தாயுமானசுவாமி
கோவில் உள்ளது. ‘மெயின்கார்டு கேட்’ என்ற வாயிலிலிருந்து
கிழக்கில் சிறிது தொலைவில் கோவிலின் நுழைவுவாயில் உள்ளது.
அனுப்பி மண்டபம், விநாயகர் சந்நிதி
ஆகியவற்றைக்
கடந்தபின் கற்படிக்கட்டுகளின் வழியே மலையின் சுமார் பாதி
உயரத்தை அடைந்தவுடன் தாயுமான சுவாமி கோவிலைக்
காணலாம்.

மூலவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த லிங்கம்
உருவில் தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள மூலவர் லிங்கத்திற்கு
அடுத்தபடியாக உள்ளது எனலாம். உறையூரைத் தலைநகராகக்
கொண்டு ஆட்சி புரிந்த கரிகாலசோழன், வழிபட்டுத் திருப்பணிகள்
புரிந்த ஆலயம் இதுவாகும் என்று கூறுவர். தாயுமானசுவாமி
கோவிலின் அம்மன் மட்டுவார் குழலம்மை எனப்படுகிறார்.
சுவாமியின் சந்நிதி, அம்மன் சந்நிதிக்குமேல் அமைக்கப்பட்டுள்ள
மாடிக் கட்டடமாக உள்ளது. கோவிலின் முக்கியப் பகுதிகள்
கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கும் 12ஆம் நூற்றாண்டிற்கும்
இடையில் எழுந்திருக்க வேண்டும் என்றும், பிற்காலத்தில்
மேலும் பல மண்டபங்கள் கட்டப்பட்டன என்றும் கருதப்படுகிறது.

கோவிலின் கலைச்சிறப்பு

1. கனம் மிகுந்த கற்றூண்களை மலைமீது ஏற்றி,
நூற்றுக்கால் மண்டபம், சித்திரமண்டபம், பதினாறுகால்
மண்டபம் அம்மன் சந்நிதி
அதன்மீது மாடிக்கட்டடமாகச்
சுவாமியின் சந்நிதி ஆகியவற்றை அமைத்திருப்பதும், மேல்
தளம் மூடப்பட்ட கற்படி வழியை அமைத்து மலைக்கோவில்
அமைத்திருப்பதும்