பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்167

ஒரு வியத்தகு பொறியியல் சாதனை ஆகும். தமிழ் மக்கள்
இறைபணியில் கொண்டுள்ள ஆர்வத்திற்கு இம்மலைக்கோயில்
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

2. சித்திர மண்டபம் இக்கோவிலின் ஓர் அரிய கலைப்
படைப்பு ஆகும். இம்மண்டபத்தின் திருப்பணியில்
துறையூர் நிலக்கிழார்கள்
ஈடுபட்டனர். இம்மண்டபத்திலுள்ள
தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லினால் ஆனவை.
இத்தூண்களின் உச்சியில் காணப்படும் கல் சங்கிலிகள்,
யாளிகளின் வாயில் காணப்படும் கல் உருண்டைகள் ஆகியவை
தமிழகச் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக
விளங்குகின்றன. இத்தூண்களின் அடிப்பகுதியில் நர்த்தன
விநாயகர், ரிஷபாரூடர், தாண்டவேசர், ஊர்த்துவ
தாண்டவர், ‘செட்டிப்பெண் மருத்துவம்’ ஆகிய சிற்பங்கள்
சிறிய அளவில் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின்
கூரைப் பகுதியில் காணப்படும் கல்லாலான கவிழ்ந்த தாமரை
மலர், கற்கிளிகள் ஆகிய சிற்ப அமைப்புகள் பார்ப்பவர்களை
வியக்கச் செய்கின்றன. இம் மண்டபத்தின் சுவர்களில் புராணச்
செய்திகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

3. இக்கோவிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபம்
அழகிய வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. இது
திருக்கல்யாண மண்டபம் எனப்படும். இம்மண்டபம்
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பெரிய வீரப்பர் என்பவரால்
கட்டப்பட்டதாகும். இம்மண்டபத்தின் நடுவில் அழகிய
சலவைக்கல் மண்டபம் உள்ளது. ‘செட்டிப்பெண் மருத்துவ
நிகழ்ச்சி விழா’, ‘திருக்கல்யாண விழா’, ‘தாயுமான
அடிகள் வழிபாட்டு விழா’
ஆகிய விழாக்கள்
இம்மண்டபத்தில் நடைபெறுகின்றன.

4. செட்டிப்பெண் என்பது இரத்தினாவதி என்ற
பெண்ணைக் குறிக்கிறது. இப்பெண் திரிசிராமலை செவ்வந்தி
நாதரை (தாயுமான சுவாமியை) வழிபட்டு வந்தார் என்றும்,
இவரது பிரசவ காலத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால்
இவர் தாயின் உதவி இவருக்கு உரிய காலத்தில்
கிடைக்கவில்லையென்றும்; இதனால் இறைவன் தன்மீது பற்றுக்