கொண்ட செட்டிப் பெண்ணுக்குத் தாயாக வந்து உதவினார்
என்றும், வெள்ளம் வடிந்தபின் வந்த அப்பெண்ணின் உண்மைத்
தாய் மூலம், இறைவனின் திருவருள் தெரிய வந்தது என்றும்,
‘தாயாக வந்து’ அருள் புரிந்த இறைவன் (செவ்வந்தி நாதர்)
தாயும் ஆனவர் - தாயுமானவர்-என்னும் பெயரைப் பெற்றார்
என்றும் கதை கூறப்படுகிறது.
திருச்சி மன்னனிடம் கணக்கராகப் பணிபுரிந்த
கேடிலியப்பர் என்பவருக்குப் பிறந்தவர் தாயுமான அடிகள்
(கி.பி. 1692-1742) ஆவார். இவர் ஒரு சிறந்த கவிஞரும்,
ஞானியும் ஆவார். தாயுமான சுவாமியை வழிபட்டுப் பேறு
பெற்ற அடியார்களுள் ஒருவராகத் தாயுமானவர் கருதப்படுகிறார்.
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்,
வேறொன்று அறியேன் பராபரமே” என்பது இவரது
சிறந்தவாக்கு ஆகும்.
4. நூற்றுக்கால் மண்டபத்திற்கு எதிரிலுள்ள
மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் ஆலயம் உள்ளது.
இம்மண்டபத்தின் முன்பகுதியில் ஒற்றைக் கற்றூண் சிற்பங்கள்
பல உள்ளன. இவை வேலைப்பாடுமிக்கவை.
தாயுமான சுவாமி கோவிலின் சிறப்பான குட முழுக்கு
விழா 1966ஆம் ஆண்டு நடைபெற்றது.
உச்சிப்பிள்ளையார் கோவில்
திரிசிராமலையின் உச்சியில் ஒரு பிள்ளையார் கோவில்
உள்ளது. இது உச்சிப்பிள்ளையார் கோவில் எனப்படும்.
தாயுமானசுவாமி கோவிலிலிருந்து சிறிது உயரத்தில் இக்கோவில்
உள்ளது. உச்சிப்பிள்ளையார் கோவிலின் பிரகாரம் வழியாக,
83 மீட்டர் உயரத்திலிருந்து திருச்சி நகரின் அமைப்பையும்,
காவிரி நதியின் எழில்மிகு தோற்றத்தையும் காணலாம்.
உச்சிப்பிள்ளையார் கோவிலின் பின்புறம், மலையின்
ஒரு பகுதியில் சமண முனிவர்களின் கற்படுகைகள்
சில உள்ளன.
|