பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்173

புத்தூரிலுள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயம்,
உறையூரிலுள்ள கிறிஸ்டோபர் ஆலயம், திருச்சி இருப்புப்
பாதைச் சந்திப்பு நிலையம் அருகிலுள்ள புனிதஜான் ஆலயம்
ஆகியவை திருச்சி நகரில் தென்னிந்திய திருச்சபையினருக்குரிய
(C.S.I) இதர ஆலயங்களாகும். சகல பரிசுத்தவான்கள் ஆலயம்
கி.பி. 1907இல் கட்டப்பட்டது. புனித ஜான் ஆலயம் 1816இல்
கட்டப்பட்டது.

லூதர் சபையைச் சேர்ந்த கிறித்தவ சமயத்தினருக்கு
திருச்சி நகரில் தரங்கம்பாடி இல்லத்திலுள்ள தூய கிறிஸ்டோபர்
ஆலயமும், சியான் ஆலயமும்
வழிபாட்டிற்கு உள்ளன.

பள்ளி வாசல்கள்

திருச்சி நகரின் மத்தியில் முகமது பள்ளிவாசல் உள்ளது.
இது இந்நகரிலுள்ள சிறப்புமிக்க பள்ளிவாசல் ஆகும்.
இது ஆர்க்காட்டு நவாப் முகமதலி வாலாஜா ஆட்சிக் காலத்தில்
(கி.பி. 1749-1795) கட்டப்பட்டது எனப்படுகிறது. இப் பள்ளிவாசல்
கட்டடம் தமிழகத்திலுள்ள இஸ்லாமியக் கட்டடங் களுள்
தலைசிறந்ததாக உள்ளது. இது முழுவதும் கருங் கல்லினால்
ஆன கட்டடமாகும். உயரமான மேடைமீது இப் பள்ளிவாசல்
கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தூண்கள், கூரைப்பகுதியில்
காணப்படும் கல் வளைவுகள் ஆகியவை நேர்த்தியான கலைப்
படைப்புகள் ஆகும். கருங்கல்லை வளைத்தும், தட்டையாக்கியும்
உருவாக்கப்பட்டுள்ள கொடுங் கைகளை இந்துக் கோவில்களில்
காண்கிறோம். இக்கொடுங்கைகளுக்கு ஈடாக, கருங்கல்லை அழகிய
கோணங்களில் வடித்து இப்பள்ளிவாசலை உருவாக்கியுள்ளனர்.
கட்டடக் கலையைப் பொறுத்தவரை திருச்சி நகரிலுள்ள முகமது
பள்ளிவாசலுக்கு இணையாகத் தமிழகத்தில் வேறு பள்ளிவாசல்
இல்லையெனலாம். நவாப் முகமதலியின் புகழுக்கு ஒரு சிறந்த
சின்னமாக இப்பள்ளிவாசல் விளங்குகிறது.

இப்பள்ளிவாசலின் முன்னுள்ள குளம் தமிழகத்திலேயே
மிகப் பெரியதாகும். நவாபின் ஆட்சிக் காலத்தில் இப்பள்ளி