1960ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது
புகழ்ச் சோழர் மண்டபம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இக்கோவில் பிரகாரத்தின் தென்மேற்கில் கருவூராரின் சமாதி
சந்நிதி உள்ளது.
கருவூர்த் தேவர் என்பவர் கருவூரில் தோன்றியவராவார்.
இவர் ஒரு சித்தர் ஆவார். தஞ்சைச் சோழமன்னன் முதலாம்
ராஜராஜனின் குருவாகவும் விளங்கினார். தஞ்சைப் பிரகதீஸ்வரர்
கோவிலில் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து பிரதிஷ்டை
செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு
திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம்
திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார்.
(தேவாரத்தை அருளிய சம்பந்தர், சுந்தரர், அப்பர், திருவாசகத்தை
அளித்த மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்களின்
பாடல்களுடன் மற்றும் சிலரின் பாடல்களும் சேர்த்துப்
பன்னிரண்டு திருமுறைகள் எனப்படுகின்றன.)
|