திருக்காவலூரின் பெருமையைத் ‘திருக்காவலூர்க் கலம்பகம்’
என்ற நூலில் பாடியுள்ளார். திருக்குறளின் அறத்துப்பாலையும்
பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து உரை
விளக்கமும் எழுதினார். தமிழ் மொழியில் எழுத்து வரிவடிவச்
சீர்திருத்தத்திற்கு அடிகோலினார். கி.பி.1747இல் மணப்பாடில்
இவர் காலமானார். கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்திற்குப்
பணியாற்றியதோடு அல்லாமல், தமிழ் மொழிக்கும்
அருந்தொண்டாற்றிய வீரமாமுனிவர், தமிழக வரலாற்றில்
ஓர் உயரிய இடத்தைப் பெறுகிறார். திருக்காவலூர் அவரது
புகழுக்கு அழியாச் சின்னமாக விளங்குகிறது.
கரூர் (கருவூர்) : திருச்சியிலிருந்து 76 கி.மீ. தொலைவில்
கரூர் உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கரூரே
சேரமன்னர்களின் தலைநகரான வஞ்சி என்று கருதப்படுகிறது.
கரூவூர்-வஞ்சி கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில்
ஒரு சிறந்த தலைநகராகத் திகழ்ந்தது எனப்படுகிறது. சேர
மன்னன் உதியஞ்சேரலாதனும் அவர் வழிவந்தவர்களும்
கருவூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டிருக்கிறார்கள் என்று
கருதப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் ஆண்டதும் கரூரே
என்பர். இவ்வூரில் கிடைத்த கி.பி. எட்டாம் நூற்றாண்டைச்
சார்ந்த இரு நடுகற்கள் மூலம், இவ்வூர் கரூர் என்றும், வஞ்சி
என்றும் பெயர் பெற்றிருந்தது என்று கொள்ளப்படுகிறது.
ரோமானிய நாட்டுடன் இவ்வூர் நெருங்கியத் தொடர்பு
கொண்டிருந்தது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட ஏராளமான
ரோமானிய நாணயங்கள் ரோமானிய மதுக் குடங்களின்
பகுதிகள் ‘பிராமி’ எழுத்துகளைக் கொண்ட பானை ஓடுகள்
ஆகியவை முன் கூறிய கூற்றை உறுதிப்படுத்தும் வகையில்
உள்ளன. புகளூர்க் கல்வெட்டுகள் இவ்வூரைப்பற்றிய முக்கியச்
செய்திகளைத்
தெரிவிக்கின்றன.
கரூரில் பசுபதீஸ்வரர் (ஆனிலையப்பர்)
கோவில்
உள்ளது. தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது
ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும்.
திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள
அம்மன் சௌந்திர நாயகி எனப்படுகிறார். இக்கோவில்
கட்டடக்கலைச் சிறப்புமிக்கது. இங்குள்ள நூற்றுக்கால்
மண்டபத்திற்கு இங்கு
|