குறிப்பிடத்தக்கது திருவிக்ரமர் திருவுருவமும்
சங்கர-நாராயணன் திருவுருவமும் ஆகும்.
நாமக்கல் மலையின்
உச்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க
சிறிய கோட்டை ஒன்று உள்ளது. (மலையின் தென்பகுதியிலுள்ள
ஒரு பாதை வழியாகக் கோட்டையை அடையலாம்.)
இக்கோட்டையை மைசூர் மன்னரிடம் பணியாற்றிய லஷ்மி
நரசிம்மைய்யா என்பவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்
கட்டினார் என்று கூறப்படுகிறது. கி.பி. 1766இல் இக்கோட்டை
ஹைதர் அலியின் கைக்கு வந்தது. மூன்றாம் மைசூர் போரில்
திப்பு சுல்தானுக்கு ஏற்பட்ட தோல்விக்குப்பின் (1792)
இக்கோட்டை ஆங்கிலேயர் வசமாயிற்று. மலை உச்சியில்
வெடி மருந்துக் கிடங்கு, பாழடைந்த ஸ்ரீவரதராஜசுவாமி கோவில்
ஆகியவை உள்ளன.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்பொழுது
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று
பாடிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
பிறந்த ஊர்
நாமக்கல் ஆகும்.
|