தர்மபுரியிலிருந்து 46 கி.மீ. தொலைவில், காவிரி நதியில்
ஒகேனகல் அருவி உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின்
வருகைத் தலமாக உள்ளது.
நாமக்கல்
சேலம் நகரிலிருந்து 48 கி.மீ. தொலைவில்
நாமக்கல் நகர்
உள்ளது. இந்நகரின் நடுவில் ‘நாமகிரி’ எனப்படும் மலை
உள்ளது.
இம்மலையின் கிழக்குப் பகுதியில் ஸ்ரீரங்கநாதர் குகைக்
கோவிலும், மலையின் மேற்குப் பகுதியில் ஸ்ரீநரசிம்மசுவாமி
குகைக் கோவிலும் உள்ளன. இவ்விரு குகைக் கோவில்களும்,
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த
சோமன் என்னும் அதியேந்திரன் குடைவித்தவையாகும். இந்த
இரு குகைக் கோவில்களும் திருமாலுக்கு உரியவை.
ஸ்ரீநரசிம்மசுவாமி கோவிலின் கருவறை நாமக்கல்
மலையின் மேற்குப்பகுதி அடிவாரத்தில் மலைப்பாறையைக்
குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. கருவறையை அடுத்துள்ள
மலைப் பாறையில் ஸ்ரீவைகுண்டநாதர், இரணிய சம்ஹாரம்,
வராக அவதாரம், உலகளந்த பெருமாள் ஆகிய
சிற்பங்கள்
வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் புராணக் கருத்துகளைக்
கொண்டுள்ளன. இச்சிற்பங்கள் யாவும் நமது
கலைச்செல்வங்களாகும்.
நரசிம்ம சுவாமியின் சந்நிதி அருகில்
நாமகிரி அம்மன்
சந்நிதி உள்ளது. நரசிம்ம சுவாமி வாயிலிலிருந்து கோவிலின்
எதிரில் சிறிது தொலைவில் ஸ்ரீஆஞ்சநேயரின் கோவில்
உள்ளது. இங்கு ஆஞ்சநேயரின் 5 1/2 மீட்டர் (18 அடி)
உயரமுள்ள சிலை உள்ளது. ஆஞ்சநேயர் நரசிம்மரைத்
தொழுதவண்ணம் காட்சியளிக்கிறார். நரசிம்மசுவாமி கோவிலிலிருந்து
ஒரு துவாரம் வழியாகப் பார்த்தால், ஆஞ்சநேயரின் உருவம்
தெரியும்படியாக கட்டட அமைப்பு உள்ளது.
மலையின் கிழக்குப்
பகுதியில் ஸ்ரீரங்கநாதர் கோவில்
உள்ளது. இதுவும் ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இங்கு
ஸ்ரீரங்கநாதர் சயனநிலையில் காட்சி தருகிறார். மலைப்பாறையின்
மீது அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள்
|