பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்191

காவிரி நதியின் கரையிலுள்ள ஈரோடு நகரில் நமது
பண்பாட்டின் சின்னங்களாக உள்ளவைபற்றி இனிச் சிறிது
காணலாம்.

பெரியார் - அண்ணா நினைவகம்

ஈரோடு என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது
ஈ.வெ.ராமசாமிப் பெரியார்
ஆவார். இவர் ‘ஈ.வெ.ரா.
பெரியார்’
எனவும் ‘தந்தை பெரியார்’ எனவும் சிறப்பாக
அழைக்கப்படுகிறார். ஈரோடு என்ற வார்த்தையின் முதல்
எழுத்து (ஈ) இப்பெரியாரின் பெயர் முன் உள்ளது. ஈ.வெ.ரா.
பெரியாரின் நினைவாகப் பெரியார்-அண்ணா நினைவகம்
ஈரோடு நகரில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நினைவகம் பெரியார்
பிறந்த வீட்டிலேயே உள்ளது.

ஈ.வெ.ரா. பெரியார் 17-9-1879இல் ஈரோடு நகரில் பிறந்தார்.
இவர், ‘திராவிட சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும்’
என்பதைத் தம் குறிகோளாகக்கொண்டு வாழ்ந்தார். தமது
குறிக்கோளை நிறைவேற்றி, வாழ்க்கையில் வெற்றி கண்டார்.
இவர் நாத்திகம், ஜாதி ஒழிப்பு, விதவைகள் மறுமணம்
போன்ற பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பினார். ஈரோடு
நகராட்சி மன்றத்தின் தலைவராக இருந்து சிறந்த பணியாற்றினார்.
தமிழ் எழுத்துகளில் இவர் சீர்திருத்தம் கண்டார். ஆரம்ப
காலத்தில் இந்தியத் தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து,
பல சத்தியாக்கிரக இயக்கங்களில் பங்குப் பெற்றார். கேரள
மாநிலத்தில் வைக்கத்தில் தீண்டாமையை ஒழிக்கும் இயக்கத்தில்
ஈடுபட்டு (1924) ‘வைக்கம் வீரர்’ என்ற சிறப்புப் பெயரைப்
பெற்றார். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தார்.
‘திராவிடர் கழகத்தின்’ (தி.க.) தந்தையாக விளங்கினார். மறைந்த
தமிழக முதல்வர் ‘அறிஞர் அண்ணா’ திராவிட முன்னேற்றக்
கழகத்தைத் தோற்றுவிக்குமுன் (1949) பெரியாரின் திராவிட
கழகத்தில் இருந்தார். ‘குடியரசு’. ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’.
‘விடுதலை’
ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பெரியார்
விளங்கினார். பெரியாரின் ‘விடுதலை’ பத்திரிகைக்கு அறிஞர்