பக்கம் எண் :

192தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

அண்ணா ஆசிரியராக இருந்தார். ‘விடுதலை’ப் பத்திரிகையின்
ஆசிரியராக அறிஞர் அண்ணா இருந்தபொழுது, பெரியாரின்
இல்லத்தின் ஒரு பகுதியில் அவர் வாழ்ந்தார். தந்தை பெரியார்
24-12-1973இல் காலமானார். தமிழகத்தின் தலைசிறந்த சமூக
சீர்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல் தலைவராகவும்
விளங்கிய ஈ.வெ.ரா. பெரியாரை நினைவுகொள்ளவும், அன்னாருடன்
நீண்ட காலம் தொடர்பு கொண்டிருந்த ‘அறிஞர் அண்ணா’வை
நினைவு கொள்ளும் வகையிலும் தி.மு.க அரசின் ஆட்சிக்
(1967-1976) காலத்தில் 1975ஆம் ஆண்டு, பெரியார் வாழ்ந்த
இல்லத்தில் (16,பெரியார் வீதி-[Court Street] ‘பெரியார்-அண்ணா
நினைவகம்’
தோற்றுவிக்கப்பட்டது.

நினைவகத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைக்
கூறும் நிழற்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், அவர்
எழுதிய நாட்குறிப்பு ஏடு, கடிதங்கள், அவர் பிறந்த இடம்
ஆகியவற்றையும், ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபொழுது
அறிஞர் அண்ணா பெரியார் இல்லத்தில் வாழ்ந்த பகுதி, அறிஞர்
அண்ணா பயன்படுத்திய சில பொருள்கள், அவர் வாழ்க்கை
வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைக் கூறும் நிழற்படங்கள்
ஆகியவற்றையும் காணலாம்.

1979ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டு பிறந்த
விழா (1879-1979) கொண்டாடப்பட்டது. இவ்விழாவைச் சிறப்பாகக்
கொண்டாட அ.இ.அ.தி.மு.க அரசு ஏற்பாடுகள் செய்தது.
பெரியாரின் நினைவாகப் பெரியார் மாவட்டம் அமைக்கப்பட்டது
(17-9-1979) பெரியாரின் சீர்திருத்த தமிழ் எழுத்துகளைப்
பயன்படுத்துமாறு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஈரோடு நகரிலுள்ள வழிபாட்டு ஆலயங்கள்

ஈரோடு நகரில் பெரிய மாரியம்மன் கோவில், சிறிய
மாரியம்மன் கோவில் , சுக்ரிவேஸ்வரர் கோவில், கஸ்தூரி
ரங்கப்பெருமாள் கோவில்
ஆகிய கோவில்கள் உள்ளன.
சுக்ரிவேஸ்வரர் கோவிலில் சோழர், பாண்டியர் காலத்துக்
கல்வெட்டுகள் உள்ளன. பெரிய மாரியம்மன் கோவிலுக்கு