பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்193

அருகில் ‘பிரப் நினைவு ஆலயம்’ உள்ளது. சீர்திருத்த
கிறித்தவ சபையினருக்கு (C.S.I) இது ஒரு பெரிய ஆலயமாக
விளங்குகிறது. புனித மரியன்னை ஆலயம் கத்தோலிக்க
கிறித்தவர்களுக்கு முக்கிய வழிபாட்டு ஆலயமாக உள்ளது.

ஈரோட்டிற்கு அருகில் விஜயமங்கலம் என்ற சிற்றூர்
உள்ளது. கங்கர்கள் சமண சமயத்திற்கு ஆதரவு கொடுத்தனர்,
சமணர்கள் கொங்கு நாட்டில் சமண சமயத்தை நிலை நிறுத்தும்
முயற்சியில் அடைந்த வெற்றியைக் குறித்து அமைத்த ஊர்
‘விஜயமங்கலம்’ ஆகும். இவ்வூரில் பல நூற்றாண்டுகளாக இருந்து
வரும் சமணர் கோவில் ‘நெட்டைக் கோபுரம்’ என்று
குறிப்பிடப்படுகிறது. கங்கர்கள் ஆட்சிக் காலத்தில் விஜய
மங்கலத்தைச் சுற்றிச் சமணர்கள் குடியேறினர். சமண சமயத்தவர்
கட்டிய ஆலயங்கள் ஈரோடு வட்டத்தில் அரசண்ணா மலை,
திங்களூர், பூந்துறை, வெள்ளோடு
ஆகிய இடங்களில்
உள்ளன. ரிஷபதேவர், சந்திரபிரபர் ஆகிய சமண
தீர்த்தங்கரர்களுக்காக எழுப்பப்பட்ட ஆலயங்களின் எஞ்சிய
பகுதிகளை விஜயமங்கலத்தில் காணலாம். இவ்வூருக்கு அருகில்
ஜுனபுரம்
அல்லது ஜனகபுரம் உள்ளது. இது நன்னூலை
இயற்றிய பவணந்தி முனிவரின் பிறப்பிடமாகும். இங்குச்
சமணருடைய ஆதிநாதர் கோவில் உள்ளது.

பவானி

காவிரி நதி அதன் துணைநதியான பவானியுடன்
கூடுமிடத்தில் பவானி என்ற நகர் உள்ளது. (ஈரோட்டிலிருந்து
16 கி.மீ.) உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கையும் யமுனையும்
கூடுமிடம் பிரயாகை (அலகாபாத்) எனப்படும். பவானியைத்
‘தென்பிரயாகை’ என்பர். சம்பந்தரின் தேவாரப்பாடல்கள்
பவானியைச் சிறப்பிக்கின்றன. இந்நகரத்தில் சங்கமேஸ்வரர்
கோவில் உள்ளது. கட்டிமுதலிகள் என்ற பாளையக்காரர்களின்
திருப்பணிகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள சில கற்றூண்களில்
கட்டிமுதலிகள் தங்களுடைய துணைவியாருடன் வணங்கி
நிற்கும் காட்சியைக் காணலாம். மைசூர் மன்னர் கிருஷ்ணராய
உடையார்,
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்வாலயத்திற்குத்
திருப்பணி புரிந்துள்ளார். வில்லியம் கேரோ என்ற ஆங்கிலேய
அதிகாரி இக்கோவிலுக்குத் தம் கையெழுத்துடன் ஒரு