) உள்ளன.
‘கொடி காத்த திருப்பூர்க் குமரன்’ சென்னிமலையில்
பிறந்தவர் ஆவார். போர்வைகள் உற்பத்திக்கு இவ்வூர் பெயர்
பெற்று விளங்குகிறது.
கொடுமுடி
ஈரோட்டிலிருந்து 34 கி.மீ. தொலைவில் கொடுமுடி உள்ளது.
பெரியார் மாவட்டத்தில் உள்ளது. கொங்கு நாட்டின் சிறந்த
சிவாலயம் இங்கு உள்ளது. இது இந்துக்களின் புனிதத்தலம்
ஆகும். இறைவன் மகுடீஸ்வரர் எனப்படுகிறார். சம்பந்தரின்
தேவாரப்பாடல்கள் கொடுமுடியைச் சிறப்பிக்கின்றன.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணி
இவ்வாலயத்தில்
உள்ளது. வீரநாராயணப் பெருமாள் என்ற வைணவ ஆலயமும்
உள்ளது.
அவினாசி, பாண்டிக் கொடுமுடி, சென்னிமலை
என்ற
இடங்களிலுள்ள ஆலயங்களின் சிறப்பினைப் புக்கணன் என்ற
ஆங்கில அதிகாரி வெளியிட்ட (1800-1807) அறிக்கையில்
காணலாம்.