சங்ககிரி
பவானியிலிருந்து 21 கி.மீ. தொலைவில்
சங்ககிரி உள்ளது.
ஊருக்கு வெகு அண்மையில் மலைக்கோட்டை உள்ளது.
இம்மலைக்கோட்டை வரலாற்றுச் சிறப்புடையது.
இம்மலைக்கோட்டையின் உயரம் சுமார் 5 கி.மீ. இதைத்
தமிழ்நாட்டிலேயே மிக உயரமான மலைக் கோட்டை எனலாம்.
மலையின் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் 9
வாயில்கள் (Gates) உள்ளன. மலைப்பாறை, பெரிய அழகிய
வடிவங்களில் உடைக்கப்பட்டு கோட்டை கட்டப்
பயன்படுத்தப்பட்டுள்ளது. கோட்டை கட்டப்
பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களும் மிக உறுதிவாய்ந்தவையாக
உள்ளன. கி.பி. 18ஆம் நூற்றாண்டில் திப்புசுல்தானால்
இக்கோட்டை பலப்படுத்தப்பட்டது என்று அறியப்படுகிறது.
ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியோரின் நடமாட்டம் சங்ககிரிப்
பகுதியில் அதிகம் இருந்தது. 9ஆவது வாயிலில் 1799 என்ற
ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாயில் ஆங்கிலேயர்
காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
மூன்றாவது வாயிலை அடுத்து
வரதராசப் பெருமாள்
கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு உள்ளது.
கல்யாண
மண்டபத்திலுள்ள தூண்கள் வேலைப்பாடுமிக்கவை.
இக்கோவிலின் ஒரு பகுதி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்
துறையினரின் பணியினால் புதிதாகக் காட்சியளிக்கிறது. 5வது
வாயிலை அடுத்துப் படைவீரர்கள் தங்கப் பயன்படுத்திய
இடம்,
சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5ஆவது 6ஆவது
வாயில்களுக்கு இடையில் இஸ்லாமியரின் தர்கா ஒன்றும்
அதனருகில் ‘மர்மமான’ சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.
6ஆவது வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கட்டடம்
உள்ளது. உச்சிப் பகுதியில் சென்னகேசவப் பெருமாள் கோவில்
உள்ளது. முக்கிய விழா நாள்கள் தவிர இதர நாள்களில்,
இக்கோவிலின் உற்சவர் மலையின் அடிவாரத்தில்
வைக்கப்பட்டுள்ளார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமி
கோவில் உள்ளது.
இக்கோட்டை இந்தியத்
தொல்பொருள் ஆய்வுத்துறையினரின்
( A.S.I) பாதுகாப்பில் உள்ளது.
|