பக்கம் எண் :

196தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

திருச்செங்கோடு

சங்ககிரியிலிருந்து 11 கி.மீ. தொலைவில் (ஈரோடு நகரிலிருந்து
18 கி.மீ.) திருச்செங்கோடு உள்ளது. இம்மலையின் உச்சியில்
அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை அடிவாரத்தில்
கைலாசநாதர் கோவில் உள்ளது. இத்தலத்தில் இறைவி தவம்
செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத்
தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறும்.
திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் இக்கோவில்
பாடப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் செங்கோட்டு வேலவனிடம்
மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார்.

இக்கோவிலின் கட்டடப்பணி கி.பி. 16ஆம் நூற்றாண்டில்
திரியம்பக உடையா
ரால் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
மகா மண்டபம் சாம்போஜி என்ற சங்கரிதுர்க் ஆளுநரால்
கட்ட ஆரம்பிக்கப்பட்டு, சீயாளி கட்டி முதலியால் நிறைவு
செய்யப்பட்டது. திருச்செங்கோட்டிற்கு அருகிலுள்ள மோ!ரைத்
தலைநகராகக்கொண்டு சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தனர். மோ!ரைச்
சேர்ந்த ஆத்தப்ப நல்லதம்பி காங்கேயன் என்பவரால்
கி.பி. 1599இல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் நிருத்த மண்டபம்
கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் வலப்பாதி ஆண்
உருவத்தையும் இடப்பாதி பெண் உருவத்தையும் கொண்ட
அர்த்தநாரீஸ்வரர் ஆவார். செங்கோட்டு வேலவனுக்கு
(முருகனுக்கு)ம் நாகேஸ்வரருக்கும் இங்குத் தனிச் சந்நிதிகள்
உள்ளன. அடிவாரத்தில் மலை உச்சிக்குச் செல்லும் வழியில்,
மலைப்பாறையில் சிவலிங்கத்தை உடலில் கொண்ட மிக நீண்ட
ஐந்து தலை நாகம் உள்ளது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக
சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும்.
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது
உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்றூண்கள்
சிற்ப வேலைப்பாடுமிக்கவை.

செங்கோட்டு வேலவர் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில்
வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக்