கல்லினாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின்
கூரைப்
பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள்,
கல்சங்கிலிகள் ஆகிய ‘சிற்ப விநோதங்கள்’
உள்ளன.
நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடுமிக்கது.
கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளிமீதுள்ள
வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. கூரைப்பகுதியில்
கவிழ்ந்த தாமரைமலர், கிளிகள், கல் சங்கிலிகள் ஆகிய சிற்ப
விநோதங்கள் உள்ளன. இவை தாரமங்கலச் சிற்பங்களை
நமக்கு
நினைவூட்டுகின்றன.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள்
முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச்செல்வங்கள்
ஆகும்.
|