பக்கம் எண் :

198தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

20. கோயம்புத்தூர்

இன்றைய கோயம்புத்தூர் மாநகரம் கொங்கு நாட்டின்
ஒரு பகுதியாகும். கோவன் என்பவர் ஆட்சிக்குட்பட்ட
பகுதியாக இருந்ததால், இப்பகுதி ‘கோவன் புத்தூர்’ என்ற பெயர்
பெற்றது என்றும், இப்பெயர் திரிந்து ‘கோயம்புத்தூர்’ ஆயிற்று
என்றும் அறியப்படுகிறது. கோயம்புத்தூர் நகரம் சிறப்பெய்துமுன்
கோயம்புத்தூரிலிருந்து 7கி.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்னும்
சிற்றூரே அன்று பெரிய ஊராகப் பெருமையுடன் விளங்கியது.
பேரூரைச் சுற்றியிருந்தப் பகுதி பேரூர் நாடு எனப்பட்டது.
இப்பேரூர் நாடு கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.
பே!ர் நாட்டின் தலைநகராகப் பேரூர் விளங்கிற்று. பேரூர்
சிறப்புற்று விளங்கிய காலத்தில் பேரூரில் அடங்கியிருந்த ஒரு
கிராமமாக இன்றைய கோயம்புத்தூர் விளங்கியது.

கோக்கண்டன் ரவி போன்ற சேரமன்னர்கள் பேரூர்
நாட்டை ஆட்சி புரிந்துள்ளனர். மாறன் சடையன் என்ற பாண்டிய
மன்னர் கொங்குநாட்டை வென்று, பேரூரை அடைந்து அங்குத்
திருமாலுக்குக் "குன்றமன்னதோர்" கோவில் கட்டினார். ஆனால்,
அக்கோவில் பிறகாலத்தில் சிதைவுற்றது. பாண்டியர்கள்
ஆட்சியையடுத்து, தலைக்காட்டுக் கங்கர்கள் கொங்கு நாட்டைக்
கைப்பற்றி ஆட்சி புரிந்தனர். கி.பி. ஏறக்குறைய ஒன்பதாம்
நூற்றாண்டில் கங்கர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்து சோழர்களின்
ஆட்சி கொங்கு நாட்டில் ஏற்பட்டது. கொங்கு நாட்டை ஆட்சி
புரிந்த சோழர்கள் கொங்குச் சோழர்கள் எனப்பட்டனர்.
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்கள்
வலிமையிழக்கவே கொங்கு நாடு பாண்டிய மன்னர்கள் ஆட்சியில்
வந்தது. கொங்குச் சோழர்கள் ஆட்சியிலும், பாண்டிய
மன்னர்கள் ஆட்சியிலும் பேரூர் நாடு சிறப்பெய்தியது.
பின் ஒய்சள மன்னர் விஷ்ணுவர்த்தனன் கொங்கு நாட்டைக்
கைப்பற்றினார். பேரூர் சாசனங்களிலிருந்து மூன்றாம் வீர வல்லாள
தேவன்
என்ற