பட்டபொழுது இவர் கலகம் செய்தார். இவரது
கலகத்திற்காக,
ஆங்கிலேயர்கள் இவரது ஜமீனை 1796-இல் இவரிடமிருந்து
பறித்தனர். இவரைத் திண்டுக்கல் கோட்டையில் காவலில்
வைத்துப் பின் சென்னைக்கு அனுப்பினர். பின்
அவர் அங்கு
காலமானர்.
ஆயக்குடி பாளையக்காரர்
மரபினர் முதலில் பழைய
ஆயக்குடியையும், பின் புது ஆயக்குடியையும்
தோற்றுவித்தனர்.
ஆந்திராவின் அகோபிலப் பகுதியிலிருந்து வந்த இவர்கள்
‘அகோபில’ என்பதைச் சுருக்கி ‘ஒபில’ என்று தங்கள்
பெயர்களில் சேர்த்துக்கொண்டனர். பெரி ஒபைய கொண்டம
நாயக்கர் ஆயக்குடி பாளையக்காரர் மரபினரின் முன்னோர்
ஆவார். மகென்சி என்பவர் சேகரித்த கையெழுத்துப் பிரதிகளின்
மூலம் கிடைத்த குறிப்புகளின்படி 1816ஆம் ஆண்டு குமார
கொண்டம நாயக்கர் என்பவர் ஆயக்குடி பாளையக்காரர் வம்சா
வழியில் 19ஆவது பட்டம் பெற்றவராக இருந்தார்.
பழனி நகரிலிருந்து 21 கி.மீ. தொலைவிலுள்ள
விருப்பாச்சி,
திண்டுக்கல்லில் அடங்கியிருந்த 26 பாளையங்களில்
ஒன்றாகும்.
இப்பாளையத்தின் முன்னோர், மதுரை நாயக்க அரசைத்
தோற்றுவித்த விஸ்வநாதருடன் வந்தவர்கள் ஆவர்.
இஸ்லாமியர் படையெடுப்பின்பொழுது விருப்பாச்சி பாளையக்கார
மரபினர் மதுரை திருமலை மன்னருக்கு உதவியதால், அவரிடமிருந்து
பல பரிசுகளைப் பெற்றனர். மலைப் பகுதியிலுள்ள பாச்சலூர்
என்ற கிராமத்தை இவர்கள் தோற்றுவித்தனர். கப்பத் தொகை
பாக்கியைப் பெறுவதற்காக 1755இல் ஹைதர்
விருப்பாச்சியைத்
தாக்கினார்.
ஆங்கிலேயர் ஆட்சி
ஏற்பட்டபின் விருப்பாச்சி
பாளையக்காரரான கோபால நாயக்கர் தென்னிந்தியக் கலகத்தில்
(1800-1801) ஈடுபட்டார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட
‘திண்டுக்கல் அணி’யைச் சேர்ந்தவர்களில்
கோபால நாயக்கர்
முக்கியமானவர் ஆவார். தென்னிந்தியக் கலகத்
தலைவர்கள்,
1800ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் விருப்பாச்சியில் கூடிய
பொழுது, அக்கூட்டத்திற்குக் கோபால நாயக்கர் தலைமை
|