214 | தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் |
காரருடன் திருமண உறவுகொண்டு, அவர்களின் நெருங்கிய
உறவினர்களாக விளங்கினர். பழனி பாளையக்காரர்கள் பழனியிலிருந்து
8 கி.மீ. தொலைவிலுள்ள பாலசமுத்திரத்தில் ஒரு
கோட்டை கட்டி
அதைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர்.
இவர்கள் தங்கள்
பெயருடன் ‘சின்னோவையன்’ என்ற குலப்பெயரையும்
பெற்றிருந்தனர். தொடைப்புயச் சின்னோவையன், காக்கிவட
வாடச் சின்னோவையன், கருப்பலச் சின்னோவையன்,
பெரிய
வடவாடச் சின்னோவையன், ஆகியோர் பழனி பாளையக்கார
மரபினரின் முன்னோர்களில் சிலர் ஆவார். கி.பி. 18ஆம்
நூற்றாண்டில் குமார விஜயகிரி வேலச்
சின்னோவையன்
என்பவர் பழனி பாளையக்காரராக இருந்தார்.
இவர் விஜயரங்க
சொக்கநாதர் (1706-1732) என்ற மதுரை நாயக்க மன்னரின்
சம காலத்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிறந்த கவிஞராக
விளங்கினார். வையாபுரிப் பள்ளு இவர் இயற்றிய நூல்களில்
முக்கிய ஒன்றாகும். இவர் இயற்றிய ‘சமய மாலை’ என்ற
நூலிலிருந்து இவர் பழனி மலைக் கோவிலுக்கு ஆற்றிய
திருப்பணிகள் அறியப்படுகின்றன. கி.பி. 1755இல்
ஹைதர் அலி
பாலசமுத்திரக் கோட்டையைத் தாக்கி, அதன்
பாளையக்காரரைத்
தண்டனைத் தொகை கட்டுமாறு செய்தார். 1761ஆம் ஆண்டு
ஹைதர் மைசூரின் மன்னரானார். எனவே, மைசூர் மன்னருக்கு
உட்பட்ட பகுதியாகப் பழனி விளங்கிற்று. 1782இல் ஹைதர்
திண்டுக்கல்லை ஆங்கிலேயரிடமிருந்து வென்ற பொழுது
திண்டுக்கல்லின் 26 பாளையங்களில் ஒன்றாகப் பழனி
விளங்கியது. ஹைதரின் மகன் திப்பு மூன்றாவது மைசூர்ப்
போரில் ஆங்கிலேயரிடம் தோல்வியுற்ற பின் ஏற்பட்ட
ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கையின்படி, (கி.பி. 1792)
பழனி,
திண்டுக்கல்லுடன் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
ஆட்சியில் வந்தது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
ஆட்சியில் பழனி வந்த பின், பழனி பாளையக்காரரான
வேலாயுத நாயக்கர், ஆங்கிலேயருக்குத் துன்பம் கொடுத்து
வந்தார். 1794ஆம் ஆண்டு இவர் ஆயக்குடி பாளையக்காரருடன்
சண்டையிடவும் செய்தார். 1795இல் ஆயக்குடிபாளையம்,
பழனி
பாளையத்திலிருந்து பிரிக்கப்
|
|
|