2.
கம்பத்தடி மண்டபத்திலுள்ள சிற்பங்கள் சிவனின்
பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. இவை கல்லில்
புராணக் கதை கூறுகின்றன. ஒற்றைக்கல்லினாலான இம்மண்டபத்
தூண்கள் ஒவ்வொன்றும் ஒரு கலைக் கருவூலம் ஆகும்.
இங்குள்ள ‘மீனாட்சி திருக்கல்யாண’ச் சிற்பம் உலகப் புகழ்
பெற்றதாகும். கம்பத்தடி மண்டபம் நாயக்க மன்னர்
முதலாம்
கிருஷ்ணப்பர் காலத்தில் (1564 - 1572) கட்டப்பட்டுப் பின்
நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பித்துத் திருப்பணி
செய்யப்பட்டது (1877).3. சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம் ஒரே
கல்லினாலானது. இது விஜயநகர் காலப் பணியாகும். 4.
அம்மனின் கருவறையும் சிற்பக்கலைச் சிறப்புமிக்கது.
சிங்கங்கள் முதலிய உருவங்களுடனும், கொடுங்கைகளுடனும்
இது கலைச்சிறப்புடன் விளங்குகிறது. 5. சுவாமி சந்நிதி முன்னுள்ள 6 கால் மண்டபமும்,
அம்மன் சந்நிதி முன்னுள்ள 6 கால் மண்டபமும், சிற்ப
வேலைப்பாடுமிக்கவை. 6. ‘முக்குறுணி விநாயகர்’ திருவுருவம் அளவில் மிகப்
பெரியது. இது திருமலை மன்னர் காலத் திருப்பணி
எனப்படுகிறது. 7. சங்கிலி
மண்டபத்திலுள்ள பஞ்சபாண்டவர் சிற்பங்கள்,
திரௌபதி சிற்பம் ஆகியவை சிறந்த கற்றூண்
சிற்பங்கள் ஆகும். 8.
ஆயிரம்கால் மண்டபம் மீனாட்சி கோவிலின்
மற்றொரு கலைச்சிறப்புமிக்க பகுதியாகும். இம்மண்டபம் நாயக்க
மன்னர் முதலாம் கிருஷ்ணப்பர் காலத்தில், அவரது அமைச்சர்
அரியநாத முதலியாரால் கி.பி. 1570இல் கட்டப்பட்டது.
நாயக்க
மன்னர் காலக் கலைத்திறனுக்கு உன்னத எடுத்துக்காட்டுகள்
ஆயிரம்கால் மண்டபச் சிற்பங்களாகும்.
பளபளப்பான
கருங்கல்லினால் உருவாக்கப்பெற்ற ஆயிரம்கால்
மண்டபச்
சிற்பங்கள் காண்போர்
|