பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்257

23. திண்டுக்கல்

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய நகரம் திண்டுக்கல்
ஆகும். இது பாண்டிய நாட்டின் ஆட்சியிலிருந்த ஒரு
பகுதியாகும். திருமலை மன்னர் காலம்முதல் (1623-1659)
திண்டுக்கல் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. மைசூர்ப்
படைகள் திண்டுக்கல்வரை படையெடுத்துத் தாக்கியபொழுது
திருமலையின் தளபதி இராமப்பய்யன் தலைமையிலான படைகள்
மைசூர் படைகளைத் திண்டுக்கல் பகுதியிலிருந்து முரியடித்தன
(கி.பி. 1625). பின் மைசூர் மன்னர் கந்தீரவனின் படைகள் மதுரை
நாயக்க அரசைத் தாக்கி மூக்கறுப்புப் போரை நடத்திய பொழுது
(கி.பி. 1656) மதுரைப் படைகள், இராமநாதபுர சேதுபதியின் படை
உதவியையும் பெற்று, மைசூர்ப் படைகளைத் திண்டுக்கல்
அருகில் முரியடித்தன.

மதுரை நாயக்க அரசின் வீழ்ச்சியை அடுத்து (கி.பி. 1736)
ஆர்க்காட்டு நவாபின் தளபதி சந்தா சாகிப்பின் ஆட்சியில்
திண்டுக்கல் வந்தது. சந்தா சாகிப்பின் சகோதரர் சதக் சாகிபு
திண்டுக்கல்லின் ஆட்சிப் பொறுப்பைப் பெற்றார்.
கி.பி. 1741க்குப் பின் திண்டுக்கல் பகுதியை மைசூர்ப் படைகள்
பிடித்தன. ஹைதர் அலி மைசூர்ப் படைகளின் தளபதியாக
இருந்த பொழுது திண்டுக்கல் பாளையக்காரர்களை
அடக்குவதற்காகப் படையெடுத்தார். தமது படையெடுப்பில்
வெற்றி பெற்றுப் பாளையக்காரர்களை அடக்கினார். பின்
திண்டுக்கல்லை மையமாக வைத்து சோழவந்தானைப் பிடித்து,
மதுரைவரை தாக்குதல்களை நடத்தினார் (1757). ஆனால், கான்
சாகிப்பின் (யூசுப் கான்) படைகள் ஹைதரின் படைகளை
முரியடித்தன. 1761இல் ஹைதர் மைசூரின் அதிகாரத்தைப் பெற்ற
பொழுது திண்டுக்கல் பாளையக்காரர்களின்மீது தமது
மேலாதிக்கத்தைச் செலுத்தினார். இரண்டாவது மைசூர்ப் போரின்
பொழுது (1783) ஹைதர், திண்டுக்கல்லை ஆங்கிலேயரிடம்
இழந்தார். ஆனால், 1784ஆம் வருட மங்களூர்
உடன்படிக்கையின்
படி