திண்டுக்கல்லை மீண்டும் பெற்றார். பாளையக்காரர்களிடமிருந்து
கப்பத்தொகையைப் பெறுவதற்காக ஹைதரின் மகன் திப்பு
கி.பி. 1788இல் திண்டுக்கல் வந்தார். மூன்றாவது
மைசூர்ப்போரின்பொழுது (1790) ஜேம்ஸ் ஸ்டூவர்ட்
தலைமையிலான ஆங்கிலப் படைகள் திப்புவின் படைகளைத்
தோற்கடித்துத் திண்டுக்கல்லைப் பிடித்தன. 1792ஆம் வருட
ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கையின்படி திப்பு திண்டுக்கல்லை
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்துவிட்டார்.
திண்டுக்கல் 1866இல் நகராட்சி ஆயிற்று, பூட்டு, இரும்புப்
பெட்டி ஆகியவற்றின் உற்பத்திக்கு இந்நகர் சிறந்து விளங்குகிறது.
1981ஆம் வருடக் கணக்குப்படி இந்நகரின் மக்கள் தொகை
1,70,196 ஆகும்.
திண்டுக்கல் கோட்டை
திண்டுக்கல் நகரின் வரலாற்றுச் சிறப்பைக் கூறும்படியாக
இந்நகரின் மேற்கில் மலைக்கோட்டை ஒன்று உள்ளது.
இக்கோட்டை மதுரை மன்னர் திருமலை காலத்தில்
(1623-1659) கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மைசூர் மன்னர்கள்
ஆட்சிக் காலத்தில் இக்கோட்டை மிகவும் பலப்படுத்தப்பட்டது.
மதுரை நாயக்கப் படைகள், மைசூர்ப் படைகள், ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் ஆகியவை பல முறை
போர்புரிந்த ஓர் இடமாகத் திண்டுக்கல் கோட்டை உள்ளது.
இக்கோட்டையின் பெரும்பகுதி இன்னும் நல்ல நிலையில்
உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலையடுத்துப் படைகள்
தங்கிய அறைகள், கைதிகளைப் பூட்டிவைத்த அறைகள்
உள்ளன. கோட்டையின் மேற்குப் பகுதியில் உள்ள
வெடிமருந்துச் சாலையின் கட்டட அமைப்பு, கழிவறைகளின்
அமைப்பு ஆகியவை சிறப்புமிக்கனவாக உள்ளன, மலையின்
உச்சிப் பகுதியில் பெரிய பீரங்கி உள்ளது. வழிபாடற்ற சிவாலயம்
ஒன்றும் மலையின் உச்சியில் உள்ளது. பாண்டிய மன்னர்
காலத்தில் சிவனுக்காக இக்கோவில் எழுப்பப்பட்டதாகவும்
விஜயநகர அரசு காலத்தில் அம்மன் சந்நிதி
ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது. ஒற்றர்கள் கோட்டையினுள்
|