பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்259

உள்ள அபிராமி அம்மன் கோவிலுக்கு வருவதைத் தடுப்பதற்காக,
திப்பு சுல்தான், இக்கோவிலின் சந்நிதியிலுள்ள, தெய்வங்களை
அகற்றித் திண்டுக்கல் நகருக்ககுள் கொண்டு செல்லச் செய்தார்
என்று கூறப்படுகிறது. மலைக்கோட்டையைக் கட்ட, மலையின்
ஒரு பகுதியில் வெட்டப்பட்ட கற்குழி, மழைகாலத்தில் ஆழமான
குளமாகக் காட்சியளிக்கிறது. இம்மலைக் கோட்டையின்
வாயிலருகிலுள்ள ஓர் அறையில், பயன்படுத்தப்பட்ட
பீரங்கிக்குண்டுகள் பல உள்ளன.

தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர்
பொறுப்பில் இக்கோட்டை உள்ளது.

காளகத்தீஸ்வரர் கோவில்

திண்டுக்கல் நகரின் மத்தியில் காளகத்தீஸ்வரர் கோவில்
உள்ளது. இங்குள்ள சிவன் காளகத்தீஸ்வரர் என்றும், அம்மன்
ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். காளகத்தீஸ்வரர்
சந்நிதியை அடுத்து பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மன் சந்நிதிகள்
உள்ளன. பத்மகிரீஸ்வரரின் லிங்கத் திருவுருவமும், அபிராமி
அம்மனின் திருவுருவமும், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்
இன்றைய மலைக்கோட்டையின் உச்சியிலுள்ள சந்நிதிகளில்
இருந்ததாகவும், திப்பு சுல்தான் காலத்தில் இத்திருவுருவங்கள்
மலைக்கோவிலிலிருந்து அகற்றப்பட்டு, இன்றைய
காளகத்தீஸ்வரர் ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டு,
வழிபாட்டிற்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல
மலைமீதிருந்த இறைவனான பத்மகிரீஸ்வரர், திண்டுக்கல்லில்
கொடுமைகள் புரிந்த திண்டி என்ற அசுரனை மாய்த்ததாகவும்,
அவ்வசுரனின் வேண்டுகோளுக்கு இணங்கி இறைவன்
இந்நகருக்குத் ‘திண்டீஸ்வரம்’ என்று பெயரிட்டதாகவும்
புராணக் கதை கூறப்படுதிறது. மலைமீதிருந்த கோவில் விஜயநகர
அரசர் அச்சுதராயர் காலத்தில் புதுப்பிக்கப்பெற்றது.

காளகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் கோட்டை
மாரியம்மன் கோவி
லும், மலையடிவாரத்தில் சீனிவாசப்
பெருமாள்
கோவிலும் உள்ளன.