புனித ஜோசப் கிறித்தவ ஆலயம்
திண்டுக்கல் நகரின் மத்தியில்
புனித ஜோசப் கிறித்தவ
ஆலயம் உள்ளது. புனிதத் தந்தை சைர் (Saint
Cyr)
காலத்தில் கி.பி.1866இல் இவ்வாலயம் கட்டும் பணி
தொடங்கப்பட்டது. ஆங்கிலக் கட்டட அறிஞர் லமோத்தே
(Lamothe) இக்கட்டடத்தை நிறுவும் பணியை மேற்கொண்டார்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் இடிந்து கிடந்த கருங்கற்கள்,
விலைக்கு வாங்கப்பட்டு இவ்வாலயத்தின் அடித்தளம்
அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இத்தாலி, இங்திலாந்து
முதலிய நாடுகளிலிருந்தும் இவ்வாலயம் அமைக்க நிதி உதவி
கிடைத்தது. கி.பி. 1866இல் தொடங்கப்பட்ட பணி 6
ஆண்டுகளில் நிறைவுபெற்று, 1872இல் ஆலயம் வழிபாட்டிற்குத்
திறக்கப்பட்டது. பிரெஞ்சு இயேசு சபையைச் சேர்ந்த
தந்தை
ரபடேல் (Fr. Rapatel) இதன் முதல் குருவாகப் பணியாற்றினார்.
மலைக்கோட்டையிலிருந்து பெறப்பட்ட அழகிய கற்களால்
அமைக்கப்பட்ட அடித்தளம் இவ்வாலயத்திற்கு மிக்க அழகைக்
கொடுத்துள்ளது. இயேசு கிறிஸ்து, புனித ஜோசப், இயேசுவின்
சீடர்கள் ஆகியோரின் அழகிய சிலைகள் இவ்வாலயத்தில்
உள்ளன. ‘கோதிக்’ கலையம்சங்களைக் கொண்ட இவ்வாலயம்
கிறித்தவக் கட்டடக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகும். திண்டுக்கல் நகரின் பேருந்து நிலையம்
அருகில் தென்னிந்திய திருச்சபைக்குரிய (C.S.I) புனித
பவுல் ஆலயம் உள்ளது.
பேகம்பூர் மசூதி
மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆட்சியில் திண்டுக்கல்
ஒரு பகுதியாக இருந்ததைக் குறிக்கும் ஒரு நினைவுச் சின்னம்
பேகம்பூர் மசூதி ஆகும். பேகம்பூர் திண்டுக்கல் நகரின்
தென்பகுதியில் (திண்டுக்கல்-மதுரைச் சாலையை அடுத்து)
உள்ளது. இங்கு இஸ்லாமிய மக்களின் பள்ளிவாசலுக்கு
அருகில் ஜனாபா அமிருன்னிசா பீகம் சாகிபா என்ற
அம்மையாரின் பெயரைக் கொண்ட ‘தர்கா’ உள்ளது.
இவ்வம்மையார், மைசூர் மன்னர் திப்பு சுல்தானின்
தாய்மாமனின் மனைவியாவார். இவர் கணவர்
|