பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்261

மீர்சாகிப் என்ற மீர் ரசாலிகான் ஆவார். இவர் திண்டுக்கல்
பிரதேசத்தின் குத்தகைதாரராக இருந்தார்.

அமிருன்னிசா பீகம் இஸ்லாமிய சமயத்தில் ஆழ்ந்த
பற்றுக் கொண்டவராகவும், ஒரு தத்துவ ஞானியாகவும் இருந்தார்.
இவர் காலமானபின், அடங்கிய இடம் ஒரு ‘தர்கா’ ஆயிற்று.
தர்காவிற்கும் பள்ளிவாசலுக்கும், பராமரிப்புச் செலவுக்காகத் திப்பு
சுல்தான் ஏராளமான நிலங்களை வழங்கினார். தர்காவில் அழகிய
குவிமாடம் உள்ளது. தர்காவின் முன் பகுதிச் சுவரில் கி.பி. 1767
என்ற ஆண்டைக் குறிக்கும் பாரசீக மொழிக் கல்வெட்டு உள்ளது.
ஒவ்வோராண்டும் (ரபியுலவ்வல் மாதம்) கந்தூரி விழா இங்கு
நடைபெறுகிறது.

அமிருன்னிசா பீகத்தின் தர்காவை மையமாக வைத்து
இன்றைய ‘பேகம்பூர்’ நகர்ப்பகுதி உண்டாயிற்று.

தாடிக் கொம்பு

திண்டுக்கல் நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் தாடிக்கொம்பு
என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ்மிக்க சௌந்திரராஜப்
பெருமாள் கோவில்
உள்ளது. இக்கோவில் கி.பி. 16ஆம்
நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் அச்சுதராயர் காலத்தில்
எழுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கோவிலின்
சுந்தரபாண்டிய மண்டபம் நாயக்கர் காலப் பணியாகும் என்று
கூறப்படுகிறது.

சௌந்திரராஜப் பெருமாளின் சந்நிதியை அடுத்து சௌந்திர
வல்லித் தாயாரின்
சந்நிதி உள்ளது. ஆண்டாள் சந்நிதி,
கருடாழ்வார் சந்நிதி, வேணுகோபால சந்நிதி, அவதார
மண்டபம், நம்மாழ்வார் சந்நிதி
ஆகியவை இக்கோவிலின்
இதர முக்கியப் பகுதிகளாகும். இக்கோவிலையடுத்து லக்ஷிமி
நரசிம்மருக்கான சந்நிதியும், சக்கரத்தாழ்வாருக்கான
சந்நிதியும் உள்ளன.

தாடிக் கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலின்
புகழுக்குக் காரணம், இங்குள்ள உன்னதச் சிற்பங்கள் ஆகும்.
இக்கோவிலின் சிற்பக்கலைச் சிறப்புமிக்க பகுதி தாயாரின்