பக்கம் எண் :

262தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சந்நிதி முன்னுள்ள அன்ன மண்டபமும், சுந்தரபாண்டிய
மண்டபமும்
ஆகும். அன்னமண்டபத்தில் காணப்படும்
கொடுங்கைகள், இசைத் தூண்கள்
ஆகியவை
சிற்பக்கலைச் சிறப்புமிக்கவை. இம்மண்டபத்தில் காணப்படும்
மனித உருவச் சிற்பங்கள், விஜயநகர அரசின் மன்னர்கள்,
அவர்கள் குடும்பத்தினருடையனவாக இருக்கலாம் என்று
கருதப்படுகிறது.

இக்கோவிலின் வியத்தகு சிற்பங்கள் சுந்தரபாண்டிய
மண்டபத்தில் உள்ளன. இங்குள்ள மண்டபத்தில் காணப்படும்
தூண்சிற்பங்களின் பெயர்கள் பின்வருமாறு

1. கார்த்தவீரிய அர்ஜு னன்

2. சக்கரத்தாழ்வார்

3. ஸ்ரீமகாவிஷ்ணு

4. ஸ்ரீவைகுண்ட நாதர்

5. அகோர வீரபத்திரர்

6. ஸ்ரீராமர்

7. தில்லைக்காளி

8. ஸ்ரீநடராசர்

9. நரசிங்கப் பெருமாள் - இரண்யசுரன் யுத்தம்

10. இரண்ய சம்காரம்

11. மன்மதன்

12. ரதி

13. ஸ்ரீமதன கோபாலன்

14. உலகளந்த பெருமாள்

15. யாளிகளைத் தாங்கிய தூண்கள்

மேற்கூறிய சிற்பங்கள் ஒற்றைக்கல்லினாலானவை. இவை
ஒவ்வொன்றும் ஒரு கலைக் கருவூலம் ஆகும். இவை பல
புராணச் செய்திகளைச் சித்திரிக்கின்றன. நாயக்கர் காலச்
சிற்பக்கலைக்கு உன்னத எடுத்துக்காட்டுகளாக இத்தூண்கள்