பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்263

விளங்குகின்றன. இவற்றின் கலையழகு யாவரும் போற்றும்
வண்ணம் உள்ளது.

இக்கோவிலின் கோபுரமும் சிற்ப வேலைப்பாடுமிக்கது.

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள்கோவில் முன்னோர்
நமக்கு விட்டுச் சென்றுள்ள மிகச்சிறந்த கலைச் செல்வமாகும்.

திண்டுக்கல்லிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பழனி சாலையில்,
ரெட்டியார் சத்திரத்தில் கோபிநாத சுவாமி கோவில் உள்ளது.

காந்தி கிராமம்

திண்டுக்கல் நதரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் மதுரை
சாலையில், காந்தி கிராமம் உள்ளது. காந்தியடிகளின்
கிராமியப் பொருளாதாரக் கருத்துகளைப் பரப்பும் நோக்கத்துடன்
டாக்டர் T.S. சௌந்திரம் அம்மையார், அன்னாரின் கணவர்
G. இராமச்சந்திரன்
ஆகியோர் முயற்சியால் 1947ஆம்ஆண்டு
இக்காந்தி கிராமம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியச் சுதந்தரப்
போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களில் மதுரை நகரில்
குறிப்பிடத்தக்கவர், T.S. சௌந்திரம் அம்மையார் ஆவார்.
முதலில் ஆரம்பப் பள்ளியும் 1956ஆம் வருடம் கிராமியக்கல்வி
நிலையமும் காந்தி கிராமத்தில் தோற்றுவிக்கப்பட்டன. கிராமியக்
கல்லூரியாக விளங்கிய இம்மையம் வளர்ச்சி பெற்று 1976ஆம்
ஆண்டுமுதல் ஒரு கிராமியப் பல்கலைக் கழகமாக
விளங்குகிறது.

காந்தி கிராமம் அருகிலுள்ள சின்னாளபட்டி கைத்தறி
நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றுள்ளது.