பக்கம் எண் :

310தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

அழகில் சிறந்துள்ளன. சுவாமி சந்நிதி முன்னுள்ள துவாரபாலகர்கள்
சிலை, வேலைப்பாடுமிக்கவை. கம்பத்தடி மண்டபத் தூண்களில்
காணப்படும் முத்திருளாயி அம்மாள் சிலை, முத்துக் கருப்பணன்
சேர்வைக்காரர், ஆண்டியண்ணன் சேர்வைக்காரர்,
வேலாயுதசுவாமிகள் ஆகியோரின் சிலைகள் சிற்பக்
கலைத்திறனைக் கொண்டுள்ளன.

சேதுபதி மன்னர்களின் திருப்பணியைக் கொண்டுள்ள
இக்கோவிலின் மதில் அழகுடன் காட்சியளிக்கிறது. சந்நிதி
முன்னுள்ள மண்டபத்தின் உத்திரத்தில் காணப்படும் மீன்களின்
உருவங்கள் பாண்டிய மன்னர்களது சின்னத்தைக் குறிக்கின்றன.

இராமநாதபுர சமஸ்தானத்திற்குரிய தேவஸ்தானத்தின்
நிர்வாகத்தில் இக்கோவில் உள்ளது.

தமிழ் மக்களின் சிற்ப, கட்டடக்கலைத் திறனுக்கு ஒரு
எடுத்துக்காட்டாகத் திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோவில்
விளங்குகிறது.

அருப்புக்கோட்டை

திருச்சுழியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அருப்புக்
கோட்டை
உள்ளது. இந்நகரில் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
கி.பி. 1216இல் கட்டிய சொக்கநாதசுவாமி கோவில் உள்ளது.
இந்நகரின் மத்தியிலுள்ள மற்றொரு சிவன் கோவில் அமுத
லிங்கேஸ்வரர்
கோவில் எனப்படுகிறது. இக்கோவில்
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு உரியது ஆகும்.
நாடார்கள் உறவின் முறைக்குரிய மற்றொரு முக்கிய கோவில்
முத்து மாரியம்மன் கோவில் ஆகும்.

அருப்புக்கோட்டை

அமுதலிங்கேஸ்வரர் கோவில் தமிழ் மக்களின்
இருபதாம் நூற்றாண்டின் சிற்பக்கலைத் திறனுக்கு ஓர்
எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1901ஆம் ஆண்டில்
அமைக்கப்பட்ட சுவாமி சந்நிதி ஆறுகால் மண்டபம்,
1928இல் உருவாக்கப்பட்டுள்ள வரதராஜப் பெருமாள் சந்நிதி
ஆகியவை சிற்ப வேலைப்பாடுமிக்கவை. சுவாமி சந்நிதி
ஆறுகால் மண்டபத்