பக்கம் எண் :

314தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மேலாக அணையாது எரியும் தீபம் உள்ளது. இது போல்
இந்தியாவில் எங்கும் இல்லை எனப்படுகிறது.

இந்நகரிலுள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், ஸ்ரீமாரியம்மன்
கோவில், ஸ்ரீஅம்மன் கோவில் முதலியவை சிவகாசி இந்து
நாடார்கள் உறவின்முறை நிர்வாகத்திற்கு உட்பட்டனவாகும்.
ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலும் நாடார் சமூகத்தினரின்
நிர்வாகத்திற்குட்பட்டுள்ளது. சுமார் 130 ஆண்டுகளாக இருந்து
வரும் இந்நகரின் பெரிய தேர் 100 டன் எடை உள்ளதாகும்.
இத்தேர் மரச்சிற்ப வேலைமிக்கது.

பத்திரகாளியம்மன் உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும்
‘ஆறாம் திருவிழா’ இந்நகரின் புகழ்மிக்க திருவிழாவாகும்.

தீப்பெட்டி, அச்சுத்தொழில்

சிவகாசி நகர் இந்தியாவின் பொருளாதார வரலாற்றில்
ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தீப்பெட்டி மற்றும்
பட்டாசு வகைகளைத் தயாரித்தல் இங்குக் குடிசைத் தொழில்
முறையில் சிறப்பாக நடைபெறுவதே இதற்குக் காரணமாகும்.
தீப்பெட்டியைக் குடிசைத் தொழில் முறையில் தயாரித்தல்
முதன்முதலில் தமிழ்நாட்டில் சிவகாசி நகரில்தான் ஆரம்பமாயிற்று.
இத்தொழிலை இந்நகரில் முதலில் ஆரம்பித்தவர்கள்
‘அணில்’ P. அய்ய நாடார் அவர்களும், ‘காகா’
A. சண்முக நாடார்
அவர்களும் ஆவர். இவர்கள்
இத்தொழிலைக் கல்கத்தா விலிருந்து கற்றுவரச் செய்தவர்
சிவனடியான் S.V. குருசாமி நாடார் ஆவார். 1923ஆம்
ஆண்டு இந்நகரில் முதல் தீப்பெட்டித் தொழிற்சாலை
தோற்றுவிக்கப்பட்டது. 1923இல் பட்டாசு தயாரிக்கும்
தொழிற்சாலையும் தோற்றுவிக்கப்பட்டது. சிவகாசி நகரையடுத்த
சாத்தூர், கோவில்பட்டி
முதலிய இடங்களிலும்
இத்தொழிற்சாலைகள் பரவின.

இந்தியாவிலேயே குடிசைத் தொழில் முறையில் தீப்பெட்டி
மற்றும் பட்டாசு வகைகளைத் தயாரிப்பதில் முதலிடம் பெறும்
இடம் சிவகாசி நகர் ஆகும். இந்நகரில் தயாரிக்கப்படும்
பட்டாசு வகைகள் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்படுகின்றன.