சிவகாசி நகர் வண்ண
அச்சுத் தொழிலிலும் புகழ்பெற்று
விளங்குகிறது. வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி
செய்யப்பட்டுள்ள
பல இயந்திரங்களைப் பயன்படுத்தி உயர்ரக அச்சுத் தொழிலில்
இந்நகர் புகழ் பெற்றுள்ளது. இந்நகரின் முதல் அச்சுக்கூடம்
1922ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. லித்தோ அச்சு
வேலை K.S.A. அருணகிரி நாடார் அவர்களால்
தொடங்கப்
பெற்றது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், சில
வெளிநாடுகளிலிருந்தும் அச்சு வேலைக்காகப் பலர் சிவகாசி
நகருக்கு வருகின்றனர். இந்திய நாட்டில் அச்சுக்கலையில்
சிவகாசி நகர் ஐந்தாவது இடத்தைப் பெற்று (1. பம்பாய், 2. டில்லி,
3. கல்கத்தா, 4. சென்னை, 5. சிவகாசி) சிறப்புடன்
திகழ்கிறது.
தொழில்துறையில் சுறுசுறுப்புடன் விளங்கும் சிவகாசி ஒரு
“சிறு ஜப்பான்” என்று கருதப்படுகிறது.
சிவகாசி நகரில் இரு பெரிய கிறித்தவ ஆலயங்கள்
உள்ளன. மாரியம்மன் கோவிலருகிலுள்ள புனித லூர்து
அன்னை ஆலயம் கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்குரியதாகும்.
இவ்வாலயம் கி.பி. 1918இல் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாலயத்தை
எழுப்பப் பிரான்ஸ் நாட்டின் குடும்பத்தினரும் நிதி
வழங்கியுள்ளனர். 1922இல் இதன் கோபுரங்கள் கட்டப்பட்டன.
நகரின் மத்தியிலுள்ள இராக்லாண்டு நினைவு ஆலயம்
சீர்திருத்த சபையினருக்குரியதாகும். தாமஸ் கஜேட்டன்
ராக்லாண்டு (1815-1858) என்ற ஆங்கிலேயர் 1845 முதல்
இந்தியாவில் சமயப் பணியாற்றினார். இவர் 1858இல் சிவகாசி
நகரில் காலமானார். இவர் நினைவாக இந்த ஆலயம்
1925இல் எழுப்பப்பட்டது. இதன் அழகிய கோபுரம் 1938இல்
அமைக்கப்பட்டது.
இராக்லாண்டு நினைவு
ஆலயத்திலிருந்து சிறிது
தொலைவில் இஸ்லாமிய மக்களின் பெரிய
பள்ளிவாசல்
உள்ளது.
வீரபாண்டியனின் சிவகாசிச் செப்பேடுகள்
பாண்டிய மன்னன் வீரபாண்டியன்
கவிஞர் ஒருவருக்கு
நிலம் தானமாக அளிக்கப்பட்டதை வீரபாண்டியனின்
சிவகாசிச்
செப்பேடுகள் கூறுகின்றன. இச்செப்பேடுகள் சிவகாசி
நகரிலுள்ள
ஓறகண்டி கனகய்யாநாயுடு என்பவரின் குடும்பத்தாரிடமிருந்து
|