நாங்குநேரிக்கு அருகிலுள்ள மற்றொரு முக்கிய இடம்
திருக்குறுங்குடி ஆகும். இது ஒரு சிறந்த வைணவத்தலம் ஆகும்.
இங்கு அழகிய நம்பி கோவில் உள்ளது. ஆழ்வார்களின் பாடல்
பெற்ற தலமாகும். நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்
இக்கோவில் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டது. இக்கோவிலின்
சிற்பங்கள் அழகிய கலைப்படைப்புகளாகும். இவற்றுள் சில
கருடன்மீது வீற்றிருக்கும் விஷ்ணு, ராமானுஜர் சீடர்களுக்குப்
போதிப்பது, ஊர்த்துவதாண்டவம் ஆகியவையாகும். கோவில்
கோபுரத்தின் அடிப்பகுதி இதிகாச நிகழ்ச்சிகள்
சிலவற்றை
அழகுடன் சித்திரிக்கின்றது. இக்கோவிலின் ஒரு
பகுதியில்
சிவபெருமானுக்கான சந்நிதி உள்ளது. இங்குள்ள
இறைவன்
மகேந்திரகிரிநாதர் எனப்படுகிறார்.
வைணவப் பெரியார்
இராமானுஜரால், திருக்குறுங்குடியில
தோற்றுவிக்கப்பட்ட மடம், வைணவக் கருத்துகளையும்.
இராமானுஜரின் போதனைகளையும் பரப்பி வருகிறது.
நாங்குநேரிக்கு அருகில் (திருநெல்வேலியிலிருந்து 20
கீ.மீ)
கன்னியாகுமரி செல்லும் சாலையில், மூன்றடைப்பு என்ற கிராமம்
உள்ளது. இங்கு பெலிகன் முதலிய பல அழகிய நீர்ப்பறவைகளின்
சரணாலயம் உள்ளது.
பொட்டல் புதூர்
திருநெல்வேலியிலிருந்து 30 கீ.மீ. தொலைவில் பொட்டல்
புதூர் உள்ளது. இங்கு இஸ்லாமிய மக்களின் புகழ்மிக்க
பள்ளிவாசல் உள்ளது. கி.பி. 17ஆம் நூற்றாண்டில்
இப்பள்ளிவாசல்
கட்டப்பட்டது எனப்படுகிறது. இப்பள்ளி வாசலை அடுத்து,
சின்ன
உமர் லெப்பை என்ற பெரியார் அடங்கியிருக்கிறார். இஸ்லாமிய
மக்கள் மட்டுமல்லாமல், இந்து சமயத்தினரும் வருகை தரக்கூடிய
புனிதத் தலமாகப் பொட்டல் புதூர் பள்ளிவாசல்
உள்ளது.
|