பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்355

கொண்டனர். கி.பி. 1540முதல் 1658வரை தூத்துக்குடியில்
போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தி அமைதியான
வாணிபத்தில் ஈடுபட்டனர். புனித சவேரியார் 1543இல்
தூத்துக்குடிக்கு வருகை தந்தபொழுது தூத்துக்குடி போர்ச்சுக்கீசிய
ஆளுநரைப் பெற்றிருந்தது.

போர்ச்சுக்கீசியர்கள், இயேசு சபையினருக்கு ஆதரவு
கொடுத்து இந்தியாவில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பினர்.
இயேசு சபையினரை இந்தியாவிற்கு வரவழைத்தது முத்துக்
குளித்துறையாகும் எனலாம். இந்தியாவிற்கு வந்த முதல் இயேசு
சபைக் குரு புனித சவேரியார் (1506-1552) ஆவார். புனித
சவேரியார் காலத்தில் தூத்துக்குடி சுமார் 6000 மக்களைக் கொண்ட
ஒரு கிராமமாக இருந்தது. இங்கு ஏறக்குறைய 4000 பேர்
கிறித்தவர்களாக இருந்தனர். முத்துக் குளித்துறையில் இருந்த 30
கிறித்தவ ஊர்களுக்கும் தூத்துக்குடி தலைமை தாங்கி நின்றது
எனப்படுகிறது.

போர்ச்சுக்கீசியரின் ஆதரவினால் கி.பி. 1558இல்
தூத்துக்குடியில் புனிதப்பனிமய மாதா ஆலயம் எழுந்தது.
புனித சவேரியாருக்குப்பின் தூத்துக்குடி வந்த இயேசு
சபைப்பாதிரியார்களில் முக்கியமானவர் ஜோசப் வாஸ் அடிகள்
ஆவார். “இந்தியாவில் சிறப்புற்று விளங்கும் எந்த நகருக்கும்
தூத்துக்குடி பின்தங்கியதல்ல”
என 1604ஆம் ஆண்டுக்குறிப்பு
ஒன்று தூத்துக்குடியைப் போற்றுகிறது. ஆனால், டச்சுக்காரர்களின்
வருகையினால் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களின்
செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாகக் கி.பி. 1658இல்
தூத்துக்குடியை டச்சுக்காரர்கள் பெற்றனர். டச்சுக்காரர்கள் கிறித்தவ
சமயத்தில் சீர்திருத்தச் சபையைச் (Protestants) சேர்ந்தவர்கள்.
கால்வின்
என்ற பெரியாரின் கருத்துகளைப் பரப்பினர். கத்தோலிக்க
சமயத்தை எதிர்த்த இவர்கள் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தைக
கைப்பற்றி அதைத் தங்களது ஆயுதசாலையாகப் பயன்படுத்தினர்.
தூத்துக்குடியில் டச்சுக்காரர்கள் கோட்டை கட்ட முயன்றதால்,
மதுரை நாயக்க மன்னரது படை கி.பி. 1669இல் தூத்துக்குடியைத்
தாக்கியது. இருப்பினும் கி.பி. 1700இல் டச்சுக்காரர்கள் ஒரு
கோட்டையைக் கட்டி முடித்தனர்.