பக்கம் எண் :

366தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இக்கோவிலில் உள்ளன. இது ஓர் அழகிய கற்கோவிலாகும்.
இக்கோவிலின் எதிரிலுள்ள குளப்பகுதியில் வெற்றி வேலம்மன்
கோவில்
உள்ளது.

தொல்பொருள் ஆய்வாளர்கள் கொற்கையில் பல
பொருள்களைக் கண்டுள்ளனர். உரோமர்களின் மண்கலங்கள்,
‘பிராமி’ எழுத்துகளைத் தாங்கிய பானை ஓடுகள் முதலியவை
இங்கு நடத்திய ஆய்வில் கிடைத்துள்ளன. தமிழ்மொழிக்குத்
தொண்டாற்றிய மேலைநாட்டு அறிஞர் டாக்டர் கால்டுவெல்,
கொற்கைப் பகுதியில் கி.பி. 1880இல் ஆய்வுகள் நடத்திப் பல
தொல்பொருள்களைக் கண்டார். அமர்ந்த நிலையிலுள்ள ஒரு
புத்தரது சிலை இன்றும் இங்குள்ள வன்னிமரத்தினருகில்
காணப்படுகிறது.

கொற்கை ஒரு சிற்றூராக இன்று காணப்படினும், இவ்வூரின்
பண்பாட்டு வரலாறு நமக்குப் பெருமை அளிப்பதாக உள்ளது.

புன்னைக்காயல்

திருச்செந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் புன்னைக்காயல்
உள்ளது. தாமிரவருணி நதிக்குத் தெற்கில் புன்னைக் காயலும்,
அந்நதிக்கு வடக்கில் பழைய காயலும் அமைந்துள்ளன.
புன்னைக்காயல் போர்ச்சுகீசியரின் ஒரு முக்கிய வாணிபத்தலமாகும்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் செழிப்புமிக்க
வாணிபத்தலமாகப் புன்னைக்காயல் விளங்கியது. பின்னர்
இங்கு டச்சுக்காரர்களும் வாணிபத்தலம் அமைத்தனர். தமிழகத்தில்
முதல் அச்சுக்கூடம் 1578ஆம் ஆண்டில் சுவாமி ஜான்-டி-பாரியா
என்பவரால் புன்னைக் காயலில் நிறுவப்பட்டது. இங்குக்
கத்தோலிக்க சமயத்தினருக்கான புனித சவேரியர் ஆலயம்
உள்ளது.

பழைய காயல்

கொற்கைக்கும் புன்னைக்காயலுக்கும் இடையில் பழைய
காயல்
என்ற இடம் உள்ளது. கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டுகளில்
பாண்டிய நாட்டின் சிறந்த துறைமுகமாக விளங்கிய காயல்