பக்கம் எண் :

374தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கோபம்கொண்டு திருமலை மன்னர், தம் தளபதி இராமப்பய்யன்
தலைமையில் வேணாட்டின்மீது படையெடுத்து (கி.பி. 1634)
வெற்றி பெற்றார்.

மார்த்தாண்டவர்மன் (1729-58) என்ற மன்னர்
திருவாங்கூர் மன்னர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார்.
இவரது ஆட்சிக் காலத்தில் டச்சுக்காரர்கள் குளச்சல் கரையோரப்
பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர். ஆனால்,
கி.பி. 1741இல் நடந்த குளச்சல் கடற்போரில்
மார்த்தாண்டவர்மனின் கப்பற்படை டச்சுக்காரர்களைத் தோற்கடித்தது.
கி.பி. 1744 இல் இம்மன்னர் வேணாட்டின் பெயரைத் திருவிதாங்கூர்
என்று ஆக்கினார். திருவாங்கூர் மன்னர்களின் தலைநகராகக்
கல்குளம் என்ற பத்மனாபபுரம் (நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ.)
விளங்கியது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இன்றைய நாகர்கோவில்
பகுதி திருவாங்கூர் மன்னரின் நேரடி ஆட்சியில் இருந்தது.
இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுபட்டு,
குடியரசாகியபொழுது திருவாங்கூர்-கொச்சி ‘B’ பிரிவு அரசுகளில்
ஒன்றாக இருந்தது. இவ்வரசு ‘இராஜப் பிரமுகர்’ என்ற இந்திய
மன்னரின் தலைமையில் இருந்தது. 1956ஆம் வருடம்வரை
நாகர்கோவில் பகுதி திருவாங்கூர்-கொச்சி அரசின்
ஆட்சிக்குட்பட்டிருந்தது.

தாய்மொழியின் அடிப்படையில் இந்திய மாநிலங்கள்
பிரிக்கப்பட்டுச் சீரமைப்புச் செய்யப்பட்ட பொழுது தமிழ்மொழி
பேசும் மக்களை மிகுதியாகக் கொண்ட இன்றைய கன்னயாகுமரி
மாவட்டப் பகுதியை, சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும்
என்ற கிளர்ச்சி ஏற்பட்டது. இப்போராட்டம் நத்தானியேல், குஞ்சன்
நாடார், சிதம்பர நாதன் நாடார், மார்ஷல் நேசமணி

போன்றோர்கள் தலைமையில் நடந்தது. இதன் விளைவாக,
1956ஆம் வருடம், திருவாங்கூர்-கொச்சி அரசுடன் இணைந்திருந்த,
தமிழ் மொழியைப் பெரும்பான்மையாகப் பேசும் பகுதிகளாகிய
அகத்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு வட்டங்கள்
கன்னியாகுமரி மாவட்டமாக அமைக்கப்பட்டுச் சென்ைனை
மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.