38. நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைமையிடமான
நாகர்கோவில் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாகும். பண்டைக்
காலத்தில் இப்பகுதி இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற
சேர மன்னரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. சேர மன்னர்கள்
ஆட்சிக்குப் பின் இப்பகுதி பாண்டிய மன்னர் ஆட்சியின் கீழ்
வந்தது. நாகர்கோவில் நகரின் பண்டைய பகுதி கோட்டாறு
ஆகும். முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி. 985-1014)
கோட்டாற்றைக் கைப்பற்றி அதற்கு மும்முடிச்சோழநல்லூர்
என்ற மறுபெயரை இட்டார். கோட்டாறு, தஞ்சைச் சோழ அரசின்
தெற்கு இராணுவத் தளமாக இருந்தது. முதலாம் இராஜேந்திர
சோழன் (கி.பி. 1012-1044) காலத்திலும் கோட்டாற்றில் சோழர்படை
ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. இராமர்
திருவடி என்னும் மன்னர் நாஞ்சில் நாட்டைக் கைப்பற்றி மீண்டும்
அதில் சேரர் ஆட்சியை ஏற்படுத்தினார்.
வீர கேரள வர்மன் என்பவர்
நாஞ்சில் குரவன்
என்பவரை வென்று இன்றைய கன்னியாகுமரி, சுசீந்திரம்-இவற்றை
அடுத்துள்ள பகுதிகள் ஆகியவற்றைப் பெற்றார். கி.பி. 12ஆம்
நூற்றாண்டில் கோட்டாறும் இதனை அடுத்துள்ள பகுதிகளும்
வேணாட்டு (திருவிதாங்கூர்) அரசன் ஆட்சியில் வந்தன எனலாம்.
கி.பி. 13, 14ஆம் நூற்றாண்டுகளில் வேணாட்டின் ஒரு பகுதியாக
நாஞ்சில் நாடு ஆயிற்று. கிருஷ்ணதேவராயருக்குப் பின் ஆட்சிக்கு
வந்த அச்சுதராயர் வேணாட்டின்மீது படையெடுத்து வென்றார்
(கி.பி. 1532). ஆனால், கி.பி. 1544இல் வேணாட்டின் படைகள்
விஜய நகர் படைகளைக் கோட்டாற்றில் வென்றன. இப்பகுதி
மதுரை நாயக்க அரசின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததாகவும்
தெரிகிறது. தமக்குக் கப்பத் தொகையைக் கட்டத் தவறிய
வேணாட்டு மன்னர்மீது
|