பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்387

சவேரியார் (1506-1552) கிறித்தவ சமயப் பணிக்காகக்
கன்னியாகுமரிக்கும் வருகை தந்துள்ளார். கன்னியாகுமரியிலுள்ள
புகழ்மிக்க கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயம் புனித உபகார
மாதா ஆலயம்
ஆகும்.

கன்னியாகுமரி ஒரு சிற்றூராயிருப்பினும். இந்தியப்
பண்பாட்டின் பெருமையைக் கூறும் பேரூராக உள்ளது எனலாம்.
நமது பண்பாட்டின் பெருமைக்குரிய சின்னங்களாகக்
கன்னியாகுமரியில் உள்ளவைபற்றி இப்பகுதியில் சிறிது
காண்போம்.

பகவதி அம்மன் ஆலயம்

கன்னியாகுமரியிலுள்ள பகவதி அம்மன் ஆலயம்
தொன்மைமிக்கது. சிவபெருமானைக் கணவனாக அடையப்
பகவதிதேவி கன்னி என்ற அவதாரத்தில் கன்னியாகுமரிப்
பாறையில் ஒற்றைக்காலில் தவமிருந்ததாகவும், மணமகன்
குறிப்பிட்ட காலத்தில் வந்துசேராததால், இவ்வம்மன் கன்னித்
தெய்வமாக ஆகிவிட்டார் என்றும் புராண வாயிலாக
அறியப்படுகிறது.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தினருகில் ஸ்ரீபாத
மண்டபத்திலுள்ள பாதம், குமரி அம்மனுடைய பாதம் என்றும்,
ஸ்ரீபாத பாறையிலேதான் முன்பு பகவதி அம்மனின் கோவில்
இருந்ததென்றும், அக்கோவிலைக் கடல் கொண்டபின் இன்றைய
கோவிலில் அம்மனின் திருவுருவம் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது
என்றும் கூறுவர். பாண்டிய மன்னர்கள், தஞ்சைச் சோழ மன்னர்கள்,
கேரள மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோவில்
கொண்டுள்ளது. இராஜராஜன் காலம் முதல் சோழ
மன்னர்கள் இக்கோவிலுக்குப் பலவிதக் கொடைகளை
அளித்துள்ளனர் என்பதை இக்கோவிலில் உள்ள
கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.

கருவறையில் பகவதி அம்மன் கிழக்கு நோக்கித் தவக்
கோலத்தில் காட்சி தருகிறார். அம்மனின் தோழிகளான
தியாகசுந்தரி, பால சுந்தரி ஆகியோரின் சந்நிதிகளும்,
சாஸ்தாவின் சந்நிதியும், விநாயகர், சூரியபகவான்
சந்நிதிகளும்