39. கன்னியாகுமரி
தமிழ்நாட்டின் தென் கோடியில் கன்னியாகுமரி உள்ளது.
நமது இந்திய நாட்டின் தெற்கு நில எல்லை கன்னியாகுமரி
ஆகும். இவ்விடம் நாகர்கோவிலிலிருந்து 19 கி.மீ.
தொலைவில்
உள்ளது. கன்னியாகுமரி முனைப்பகுதியில் இந்தியாவின்
மேற்கிலுள்ள அரபிக் கடல், கிழக்கிலுள்ள வங்காள
விரிகுடா,
தெற்கிலுள்ள இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றும்
கலக்கின்றன.
கன்னியாகுமரிக்குத்
தெற்கில் ஒரு பெரிய நிலப்பகுதி
முன்பு இருந்ததாகவும் பின் அது கடல்கோளால் மறைந்து
விட்டது, என்றும் கருத்து உள்ளது. முதல் தமிழ்ச்சங்கம்
செயல்பட்ட தென்மதுரையும், இரண்டாவது தமிழ்ச்சங்கம்
செயல்பட்ட கபாடபுரமும் இன்றைய கன்னியாகுமரிக்குத்
தெற்கில் இருந்தனவென்றும், அவை கடல்கோளால் மறைந்தன
என்றும் கருதப்படுகிறது. கன்னியாகுமரிக்குத் தெற்கில்
மறைந்ததாகக் கருதப்படும் நிலப்பகுதியை லெமூரியாக் கண்டம்
என அழைப்பர். இன்றைய கன்னியாகுமரிப் பகுதி பாண்டிய
மன்னர்களாலும். தஞ்சைச் சோழர்களாலும், கேரள மன்னர்களாலும்
நாஞ்சில் நாட்டினராலும் ஆட்சிபுரியப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில்
வட்டக்
கோட்டை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்
மார்த்தாண்டவர்மன் (1729-1758) இக்கோட்டையைக்
கட்டினார். இக்கோட்டையின் எஞ்சிய பகுதிகளைக் கடற்கரை
அருகில் காணலாம்.
இந்தியாவில் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கக்
கிறித்தவ சமயம் பரவிய மையங்களில் கன்னியாகுமரியும்
ஒன்றாகும். கோவாவில் ஆட்சி புரிந்த போர்ச்சுக்கீசியரின்
ஆதரவினால் இயேசு சங்கப் பாதிரியார்கள் கி.பி. 16ஆம்
நூற்றாண்டில் இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரிவரை, மீனவர்
வாழும் கடற்கரைப் பகுதியில் கிறித்தவ சமயத்தைப் பரப்பினர்.
புகழ்மிக்க இயேசு சங்கப் பெரியாரான புனித
|