7. வெளிப்பிரகாரத்திலுள்ள கற்றூண்கள் எல்லாவற்றிலும்
தீப லட்சுமிகள் (கையில் விளக்கேற்றிய பாவைகள்) இருப்பது
இக்கோவிலுக்கு அழகிய தோற்றத்தைக் கொடுக்கிறது.
8. நவக்கிரகங்களுக்குத்
தனித்தனியாகச் சிலைகள்
வடிக்கப்படாமல் அவை ஒரு மண்டபத்தின் கூரைப்
பகுதியில் அமைக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் மற்றொரு
சிறப்பு ஆகும்.
9. நீண்ட காலமாகக்
கேரள மன்னரின் ஆட்சிக்குட்பட்ட
பகுதியாக இருந்ததால் இக்கோவிலின் வழிபாட்டில்
கேரள
நாட்டு முறை பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டினரைத் தவிர
ஏராளமான கேரள மக்களும் இக்கோவிலுக்கு வருகை
தருகின்றனர்.
சுசீந்திரம் கோவில் முன்னோர்
நமக்கு விட்டுச்
சென்றுள்ள மரபுரிமைச் செல்வமாகும்.
|