பக்கம் எண் :

384தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஊஞ்சல் மண்டபத்திலுள்ள மன்மதன், ரதி, கர்ணன்,
அர்ஜுனன்
ஆகியோரின் சிற்பங்கள் அழகுமிக்கவை. மூலவர்
சந்நிதிக்கு அருகிலுள்ள செண்பகராமன் மண்டபம் கல்லிலே
கலை வண்ணம் காட்டுகிறது. இம்மண்டபத்தின் வாயிலிலுள்ள
துவாரபாலர்களின் கற்சிற்பங்கள் பெரிய அளவிலானவை.
இம்மண்டபத்திற்கு அருகிலுள்ள திருமலை மன்னர் அமைத்த
கருடாழ்வார் மண்டபத்திலுள்ள கருடாழ்வாரின் கற்சிலை
அழகுமிக்கது. இம்மண்டபத்தில் திருமலை மன்னரின் கற்சிலை
உள்ளது. மன்னரது சிலையில் மூக்குத்துளை சிரசுவரை
செல்கிறது. காதிலுள்ள துவாரம் வழியாகச் செலுத்தும் கம்பி
மறு காது வழியாகவும் நாசித் துவாரம் வழியாகவும் வரும்படி
சிற்பம் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது. முருகன் சந்நிதி
முன்னுள்ள மண்டபத்தின் வாயிலில் காணப்படும் சிற்பங்களும்
வேலைப்பாடுமிக்கவை.

4. கைலாசநாதர் சந்நிதி ஒரு பாறைமீது கட்டப்பட்டுள்ளது.

5. குலசேகர மண்டபத்தில் நான்கு பெரும் இசைத் தூண்கள்
உள்ளன. இவை ஒரே கல்லினாலானவை. இத்தூண்களிலுள்ள
தண்டுகளை மெதுவாகத் தட்டும்பொழுது இனிய ஒலி எழும்புகிறது.
இந்த இசைத்தூண்கள் கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்
அமைக்கப் பெற்றவையாகும். இவை அரிய கலைச்செல்வங்களாகும்.
(இசைத்தூண்களின் அருகில் கொச்சி மன்னர் இராமவர்மன்,
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மன் ஆகியோரின்
சிலைகள் உள்ளன.)

6. இக்கோவிலில் ஆஞ்சநேயருக்குப் புகழ்மிக்க சந்நிதி
உள்ளது. ஆஞ்சநேயரின் கற்சிலை 5லு மீட்டர் உயரமுள்ளது.
ஒரே கல்லினாலான இத்திரு உருவம் பார்ப்பவர்களை
மெய்மறக்கச் செய்கிறது. இத்திருவுருவம் கி.பி. 1740இல்
உருவாக்கப்பட்டது என்று கருதப்பட்டாலும், 1929ஆம்
ஆண்டில்தான் கோவிலில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது
எனப்படுகிறது.