புகழுக்குக் காரணம் இங்குள்ள ஸ்ரீதாணுமாலயப்பெருமாள்
கோவில் ஆகும். இக்கோவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த
கோவில்களில் ஒன்று. இக்கோவிலின் பெரும்பகுதி சேர, சோழ,
பாண்டியர்களால் வெவ்வேறு காலங்களில் கட்டப்பட்டதாகும்.
அலங்கார மண்டபம் இராஜராஜ சோழனால் (985-1014)
கட்டப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. வேணாட்டு
(திருவிதாங்கூர்) மன்னனான வீரகேரளன் இக்கோவிலுக்குப்
பல திருப்பணிகள் புரிந்துள்ளார். விஜய நகர அரசின்
பிரதிநிதியான வித்தளன் என்பவர் கி.பி. 1545இல்
இக்கோவிலின் கோபுரத்தைக் கட்டினார். கருடாழ்வார்
மண்டபம் மதுரை நாயக்க மன்னர் திருமலையால் (1623-1659)
கட்டப்பட்டதாகும்.
சுசீந்திரம் கோவிலின் சிறப்பு
1. சுசீந்திரம் கோவில் சமயச் சிறப்புமிக்கதாகும்.
தாணு, மால்,
அயன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ஒரே வடிவில்
கொண்ட
தாணுமாலயன் கருவறையில் மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.
‘தாணு’ சிவனையும், ‘மால்’ விஷ்ணுவையும்,
‘அயன்’
பிரம்மனையும் குறிக்கிறது. மூலவரான லிங்கத்தின் மேல்பாகம்
சிவனது அம்சமாகவும், நடுப்பாகம் விஷ்ணுவின் அம்சமாகவும்,
அடிப்பாகம் பிரம்மனின் அம்சமாகவும் கருதப்படுகிறது. இதன்
மூலம் சைவ-வைணவ சமரசக் கோவிலாக இது விளங்குகிறது.
2. சித்திர சபையில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன.
இச்சபையின் நடுவில் ஒரு கண்ணாடியில் நடராசர் காட்சி
தருகிறார்.
3. சுசீந்திரம் கோவிலின்
கலைச்சிறப்பு யாவரும் பார்த்து
மகிழும்படி உள்ளது. 41 மீட்டர் உயரமுள்ள இக்கோவிலின்
கோபுரம் சுதை வேலைப்பாடுமிக்கது. கோபுரத்தின்
அடிப்பகுதியிலுள்ள கருங்கற்சுவர்களில் பல அழகிய சிற்பத்
திரு உருவங்களைக் காணலாம், இக்கோபுரம் விஜயநகர அரசு
ஆட்சியில், கி.பி. 1545இல் கட்டப்பட்டது. திருவாங்கூர்
மன்னரின் திருப்பணியையும் இக்கோபுரம் கொண்டுள்ளது.
|