பக்கம் எண் :

70தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பாதுகாப்பதில் ஆங்கிலேயர்கள் அதிகக் கவனம் செலுத்தினர்.
பின் இவை இந்தியத் தொல்பொருள் துறையினரின்
பாதுகாப்பில் வந்தன.

மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள், சிற்பங்கள்

கடற்கரைக் கோவில்

மாமல்லபுரக் கடற்கரையில் இரண்டு அழகிய விமானங்களுடன்
காட்சியளிப்பது கடற்கரைக் கோவில் எனப்படுகிறது.
உண்மையில் இக்கடற்கரைக் கோவிலில் மூன்று கோவில்கள்
அடங்கியுள்ளன. இரண்டு சிவன் கோவில்களும், ஒரு விஷ்ணு
கோவிலும் இங்கு உள்ளன. இரு சிவன் கோவில்களுக்கு
விமானங்கள்
உள்ளன. விஷ்ணு கோவிலுக்கு விமானம் இல்லை.
சிவன் கோவில்களிலுள்ள கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து
இக்கடற்கரைக் கோவில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற
இராஜசிம்ம
(700-728) பல்லவனால் அமைக்கப்பட்டது என்று
அறியப்படுகிறது. இது முழுவதும் கற்பாறைகளினால் ஆக்கப்பட்ட
கற்கட்டுக் கோவில் ஆகும். இரத அமைப்பைக் கொண்ட
விமானங்கள், கோவிலைச் சுற்றியுள்ள சிங்கம் முதலிய உருவச்
சிற்பங்கள் ஆகியவை கலைச் சிறப்புமிக்கவை. இக்கோவில்
பண்டைய நினைவுச்சின்னமாக விளங்குகிறதே தவிர இங்கு
வழிபாடு நடைபெறவில்லை. வங்கக்கடலின் அலைமோதும்
எழில்மிக்க இக்கடற்கரைக் கோவில் உலகப் புகழ் பெற்றது.
கடல் நீரின் உப்புத்தன்மை இக்கோவிலைச் சேதப்படுத்தாமல்
பாதுகாப்பது நமது கடமையாகும்.

ஐந்து கல் ரதங்கள்

கடற்கரைக் கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்
‘ஐந்து கல் ரதங்கள்’ என்ற சிற்ப விநோதங்கள் உள்ளன.
இந்த ஐந்து ரதங்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. தர்மராஜ ரதம்
2. பீம ரதம்
3. அர்ஜு ன ரதம்
4. நகுல-சகாதேவ ரதம்
5. திரௌபதி ரதம்