பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்69

(Rock-cut temples) மாமல்லபுரத்தில் அமைத்தார். இவற்றைத்
தவிர மலையைச் செதுக்கிக் கோவில்கள் (Cut-out-temples)
அமைக்கும் புதுமையையும், திறந்த வெளியில் இயற்கையாக
அமைந்த பாறைகளில் புடைப்புச் சிற்பங்களை அமைக்கும்
புதுமையையும் புகுத்தினார். ‘மாமல்லன்’ மாமல்லபுரத்தில்
தொடங்கிய புதுமையான கற்கோவில்கள், திறந்தவெளி புடைப்புச்
சிற்பங்கள் ஆகியவை அமைக்கும் பணி அவருக்குப் பின் பதவி
வகித்த பல்லவ மன்னர்களால் தொடரப்பட்டுப் பல கட்டங்களில்
முடிக்கப்பட்டன. இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம்
பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நரசிம்மன்
என்ற இராஜசிம்மன்
ஆகிய பல்லவ மன்னர்கள் இப்பணியைச் செய்தனர். கல்வெட்டுகள்,
இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மனின் பணியும் பாணியும்
மாமல்லபுரத்தில் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டுகின்றன.
கட்டுமான கற்கோவில்களை
அமைக்கும் புதுமையை
இராஜசிம்மன் புகுத்தினார். இக்கோவில்கள் அதிட்டானம்முதல்
விமானம்வரை முழுவதும் கல்லினால் ஆக்கப்பட்டவையாகும்.

இவ்வாறு பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் குடை
வரைக் கோவில்கள், வெட்டுக் கோவில்கள், பாறைச்
சிற்பங்கள், கட்டுமானக் கற்கோவில்கள்
ஆகிய நால்வகைக்
கோவில்களை அமைத்து இத்துறைமுகப்பட்டினத்தை ஒரு
சிற்பக் களஞ்சிய மாக
ஆக்கியிருக்கிறார்கள். சாளுக்கியரின்
படையெடுப்பு முதலிய காரணங்களால் பல பணிகள் முற்றுப்பெறா
நிலையிலும் சில சேதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.
தவிர, விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் இறுதியிலிருந்து
மாமல்லபுரச் சிற்பங்களும் கற்கோவில்களும் கவனிக்கப்படாமல்
விடப்பட்டனவாகவும் தெரிகிறது. ஏனெனில், கி.பி. 18ஆம்
நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் மாமல்லபுரத்திற்கு
வந்த பொழுது இங்குள்ள சிற்பங்கள் யாவராலும் கைவிடப்பட்ட
நிலையில் இருந்தனவாம். புறக்கணிக்கப்பட்ட நிலையில்
பல்லவரின் புகழ்மிக்க நினைவுச் சின்னங்கள் முற்றிலுமோ
அல்லது ஒரு பகுதியோ மணலின் அடியில் சென்றிருக்கலாம்.
இச்சிற்பங்களை மீட்டிப்