சிறிது முற்றுப்பெறாநிலையில் உள்ளது. திரௌபதி
ரதம் சிறிய
அளவினைக் கொண்டுள்ளது. குடிசை போன்ற தோற்றத்தை
இது பெற்றுள்ளது.
மேற்கூறிய ஐந்து கல் ரதங்கள் பல்லவர் காலச்
சிற்பக்
கலைத்திறனுக்கு உன்னத எடுத்துக்காட்டுகளாகும். ஐந்து கல்
ரதங்களுக்கு அருகில் யானை, சிங்கம், நந்தி ஆகியவற்றின்
அழகிய சிற்ப உருவங்கள் உள்ளன. திரௌபதி ரதத்திற்கு
எதிரில் சிங்கமும், அர்ஜு னன் ரதத்திற்கு எதிரில் நந்தியும்,
நகுல-சகாதேவ ரதத்திற்கு அருகில் யானையும் உள்ளன. ஐந்து
ரதங்கள் வடிக்கப்பட்ட குன்றைச் சேர்ந்த பாறைகளிலிருந்தே
இந்த மூன்று உருவங்களும் வடிக்கப்பட்டிருக்கலாம் என்று
கருதப்படுகிறது.
ஐந்து கல்ரதங்களைத் தவிர மாமல்லபுரத்தில் மேலும்
நான்கு கல் ரதங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று கணேச
ரதம், ‘அர்ஜு னன் தவம்’ சிற்பக் காட்சிக்கு அருகில் இந்த
ரதம் உள்ளது. சிவபெருமானுக்காக வடிக்கப்பட்ட ரதமாக
இருப்பினும் கருவறை லிங்கம் நீக்கப்பட்டு, சமீப காலத்தில்
கணேசரின் திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த
ரதம் ‘கணேச ரதம்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது.
மாமல்லபுரம் ஊரைத் தாண்டியவுடன் மாமல்லபுரம்-
திருக்கழுக்குன்றம் சாலையில் பிடாரி ரதங்கள் உள்ளன.
இவை இரண்டு ரதங்கள். பிடாரி என்ற பெண் தெய்வத்தின்
அருகில் இந்த ரதங்கள் இருப்பதால் இப்பெயர் பெற்றன.
இந்த ரதங்களுக்குத் தெற்கில் வலையன்குட்டை என்ற
குளத்திற்கு எதிரில் உள்ள ரதம், வலையன்குட்டை ரதம்
என அழைக்கப்படுகிறது.
குகைக் கோவில்கள்
மலைப் பகுதிகளையும்,
பாறைகளையும் குடைந்து
அமைக்கப்பட்ட பல்லவர் குடைவரைக்
கோவில்கள் பல
மாமல்லபுரத்தில் உள்ளன. குகைக் கோவில்களில்
பெரும்பாலானவை மண்டபக் கோவில்களாக விளங்குகின்றன.
அவை :
|