பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்73

1. மகிசாசுரமர்த்தினி குகை மண்டபம்

2. கொடிக்கால் மண்டபம்

3. கிருஷ்ண மண்டபம்

4. மும்மூர்த்தி குகை

5. வராக குகை மண்டபம்

6. ஆதிவராக குகைக் கோவில்

7. இராமானுஜ மண்டபம்

8. கோனேரி மண்டபம்

மேற்கூறிய குகைக் கோவில்களிலும், குகை மண்டபச்
சுவர்களிலும் புராண நிகழ்ச்சிகளை சித்திரிக்கும் அழகிய
சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மகிசாசுரமர்த்தினி மண்டபச்
சுவரில் துர்க்கை, எருமையின் தலைகொண்ட அசுரனுடன்
போரிடும் காட்சி, ‘விஷ்ணுவின் அழகிய நித்திரைக் கோலம்’
ஆகியவை சமயச் சிறப்பும், கலைச் சிறப்பும் மிக்கவையாகும்.
கிருஷ்ணபகவானின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்ைதை,
அழகுடன் சித்திரித்துக் காட்டும் சிற்பங்கள் கிருஷ்ண
மண்டபத்தில் உள்ளன. கோபமுற்ற இந்திரனின் செயலால்
ஏற்பட்ட கடும் மழையில் கோபியர், குழந்தைகள் ஆகியோரும்,
பல மிருகங்களும் அவதியுற்றபொழுது, கிருஷ்ண பகவான்
கோவர்த்தன மலையைப் பெயர்த்து, அதை ஒரு குடைபோல்
பிடித்து மழையில் அவதியுறும் மக்களுக்கும் மாக்களுக்கும்
அடைக்கலம் கொடுக்கும் காட்சியைக் கல் புராணக் கதையாகக்
கூறுகிறது! வராகக் குகையும், ஆதிவராகக் குகையும் திருமாலுக்கு
வடிக்கப்பட்டவையாகும். தெய்வத் திருவுருவங்களைத் தவிர
ஆதிவராகக் குகையில், சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன் ஆகிய
பல்லவ மன்னர்களின் ஆளுயர உருவங்கள் அவர்களது
மனைவியருடன் காணப்படுகின்றன.

அர்ஜு னன் தவம்

மாமல்லபுரத்தின் மத்தியில் தலசயனப் பெருமாள்
கோவிலுக்கு அருகில் ‘அர்ஜு னன் தவம்’ என்ற சிற்பக்
காட்சி உள்ளது. ஒரு குன்றின் 9 மீட்டர் உயரம்வரை உள்ள
பாறைப் பகுதி செதுக்கப்பட்டுப் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி