தருகின்றன. ‘அர்ஜுனன் தவம்’ என்பது மகாபாரதத்தில் வரும்
நிகழ்ச்சியாகும். கௌரவர்களுடன் போரிடுவதற்காக அர்ஜுனன்
கடும் தவமிருந்து சிவபெருமானிடம் ‘பாசுபதம்’ என்ற
ஆயுதத்தைப் பெற்றார் என்பது மகாபாரதச் செய்தியாகும்.
குப்தர் காலத்தில் வாழ்ந்த பாரவி என்ற புலவர் தமது
‘கிராதார்ஜுன்யம்’ என்ற நூலில் விளக்கிக்
கூறியுள்ளபடி
‘அர்ஜுனன் தவம்’ சிற்பக் காட்சி வடிக்கப்பட்டுள்ளது.
‘அர்ஜு னன் தவம்’ ஒரு ‘சிற்ப அதிசயம்’ ஆகும்.
சிவபெருமான், தேவர்கள், மனிதர்கள், யானை, சிங்கம்,
மான் முதலிய மிருகங்கள், பறவைகள் ஆகிய சுமார் 100
புடைப்புச் சிற்பங்களை ‘அர்ஜு னன் தவம்’ சிற்பத்தில்
காணலாம். ‘அர்ஜுனன் தவம்’ ஒரு சிறந்த கலைக் கருவூலம்
ஆகும். இது உலகக் கலைஞர்கள் யாவராலும் போற்றப்படுகிறது!
தலசயனப் பெருமாள் கோவில்
: ‘அர்ஜுனன் தவம்’
சிற்பக் காட்சியிலிருந்து சிறிது தொலைவில் தலசயனப் பெருமாள்
கோவில் உள்ளது. சந்திரகிரியில் ஆட்சிபுரிந்த விஜயநகர
மன்னர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. இக்
கோவிலின் அருகில் விஜயநகர் காலத்து இராயகோபுரம்
ஒன்று முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
சாளுவன் குப்பம் : மாமல்லபுரத்திலிருந்து வடக்கில்
5 கி.மீ. தொலைவில் சாளுவன் குப்பம் என்ற கடற்கரைக்
கிராமம் உள்ளது. இங்குப் பல்லவ மன்னன் இராஜசிம்மன்
காலத்தில் உருவாக்கப்பட்ட குகைக் கோவில்கள் இரண்டு
உள்ளன. ஒன்று யாளி மண்டபம் அல்லது புலிக்குகை
என அழைக்கப்படும். யாளியின் முகம் குகையின் வெளி
முகப்பு முழுவதிலும் செதுக்கப்பட்டுள்ளதால் யாளி
மண்டபம்
என்ற பெயரைப் பெற்றது. யாளி மண்டபத்திற்கு அருகில்
அதிராணசந்தா மண்டபமும் அதற்கு அருகில்
மகிஷாசுரமர்த்தினி பாறைச் சிற்பமும் உள்ளன.
சிற்பப் பள்ளி : தமிழகத்தின் சிற்பக் களஞ்சியமாக
விளங்கும் மாமல்லபுரத்தில் சிற்பப் பள்ளி ஒன்று உள்ளது.
இங்குத் தற்காலச் சிற்பிகளின் கைவண்ணத்தைக்
காணலாம்.
பூம்புகாரில்
|