பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்75

இன்று நாம் காணும் சிற்ப வேலைப்பாடுகள் மாமல்லபுரம்
சிற்பப் பள்ளியினரால் உருவாக்கப்பட்டவையாகும்.
இப்பள்ளியிலுள்ள புகழ் பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதி
ஆவார்.

தமிழ்நாட்டில் மாமல்லபுரச் சிற்பங்களுக்கு நிகராக
வேறு எங்கும் இல்லை எனலாம். பல்லவ மன்னர் காலச்
சிற்பிகள் தங்களது இணையற்ற, அபாரமான மனித உழைப்பினால்
இங்குக் கல்லில் கதை கூறியுள்ளனர்.

மாமல்லபுரம் நமது பண்பாட்டின் பெருமையை
உலகிற்குக் கூறும் புகழ்மிக்க தலம் ஆகும்.

திருக்கழுக்குன்றம்

மாமல்லபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில்
திருக்கழுக்குன்றம்
உள்ளது. இங்குள்ள மலை வேதகிரி
எனப்படுகிறது. இம்மலையின் உச்சியில் வேதகிரீஸ்வரர்
கோவில் உள்ளது. இக்கோவில் பல்லவர் காலத்துக் குடைவரைக்
கோவில் ஆகும். கருவறை, மலையில் குடைந்து
அமைக்கப்பட்டுள்ளது. உட்புறச் சுவர்களில் சோமாஸ்கந்தர்,
பிரம்மா, யோக தஷிணாமூர்த்தி
முதலிய திருவுருவங்கள்
வடிக்கப்பட்டுள்ளன.

வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள மலை உச்சிக்குப்
புனிதமாகக் கருதப்படும் இரு கழுகுகள் தினமும் காலை சுமார்
11 மணி அளவில் வந்து உணவு அருந்திச் செல்கின்றன.
ஆச்சரியமாக உள்ள இச்செயல் பல நூற்றாண்டுகளாக
நடப்பதாகக் கூறப்படுகிறது. கி.பி. 1681ஆம் வருடம் (ஜு ன் 3)
இம்மலைக்கு வந்த ஹோவர்ட் என்ற டச்சுக்காரர் இம்மலையில்
கழுகுகள் வந்து உணவருந்திச் சென்றதைக் கண்டு தமது
நூலில் குறிப்பிட்டுள்ளார். புனிதக் கழுகுகள் வரும் மலையாதலால்,
ஊரும், மலையும் திருக்கழுக்குன்றம் என்ற பெயரைப் பெற்றுள்ளன.

வேதகிரீஸ்வரர் கோவிலின் வடபக்கமாக உள்ள மலைப்படிகள்
வழியாகக் கீழிறங்கினால் மலைநடுவில் ஒரு