வேலூர் நகர வரலாற்றில் நமது பண்பாட்டின் சிறப்புக்குரிய
சின்னங்களாக இருப்பவை இரண்டு : 1. வேலூர்க் கோட்டை,
2. ஜலகண்டேசுவரர் கோவில்.
வேலூர்க் கோட்டை
தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள
கோட்டைகளில் வேலூர்க்
கோட்டை சிறப்புமிக்க ஒன்றாகும். இக்கோட்டை
கி.பி. 1274-83இல் ஆந்திராவைச் சேர்ந்த பொம்மி ரெட்டி
என்பவரால் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இதைக் கட்ட இவர்
இத்தாலியப் பொறியியல் வல்லுநர்களின் உதவியையும் பெற்றார்
என்றும் கூறப்படுகிறது. வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு
ஆட்சி புரிந்த நாயக்கத் தலைவர் சின்ன
பொம்மன்
இக்கோட்டையைப் பலப்படுத்தினார். இக்கோட்டை இராணுவ
முக்கியத்துவம் பெற்றதாக விளங்கிற்று. இக்கோட்டை முழுவதும்
கருங்கற் பாறைகளால் கட்டப்பட்டுள்ளது. இராணுவக் கட்டடக்கலைக்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோட்டை விளங்குகிறது.
பாலாற்றங்கரையிலுள்ள இக்கோட்டை இன்றும் புதியதுபோல்
காட்சியளிக்கிறது.
கி.பி. 1799இல் நான்காம் மைசூர்ப் போரில் திப்புசுல்தான்
வீரமரணம் அடைந்தபின் அவரது 12 பிள்ளைகளும்
வேலூர்க்
கோட்டையிலுள்ள சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.
கி.பி. 1806 ஆம் வருடம் வேலூர்க் கோட்டையின் வரலாற்றில்
ஒரு சிறப்புமிக்க நிகழ்ச்சி நடந்தது. இது ‘வேலூர்க் கலகம்’
எனப்படுகிறது. வேலூர்க் கோட்டையில் பணியாற்றிய இந்திய
வீரர்களுக்கு ‘கிராடக்’ என்ற ஆங்கிலத்
தளபதி உடைமுறையில்
சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
ஆனால், இச்
சீர்திருத்தங்களை விரும்பாத இந்திய வீரர்கள் 1806ஆம் வருடம்
ஜு லை 10ஆம் நாள் பல ஐரோப்பியர்களைக் கொன்று
வேலூர்
கோட்டையைக் கைப்பற்றிக் கலகம்
விளைவித்தனர். ஆனால்,
இக்கலகம் கில்லஸ்பி என்ற ஆங்கிலத்
தளபதியால்
ஒடுக்கப்பட்டது.
|